About Me

2020/10/04

நிலாச்சோறு

 1.தடுமாற்றம்

---------------------

சிந்தையின் தடுமாற்றம் உருமாற்றும் எண்ணங்களையே/

எடுத்த காரியங்களும் திசைமாறும் தடுமாறி/

பகுத்தாராயும் சிந்தனையே வகுத்திடும் வெற்றியை/

 2.உன்னைத் தேடும் என் விழிகள்

----------------------------------------------------------

அசைகின்ற ஊஞ்சலில்

அலைகின்றதே பாச நினைவுகள்

எட்டுத் திக்கெங்கும்

விழித் தேடலுக்குள் தாயுருவம்

 
3.சொல்லத் துடிக்குது மனசு
----------------------------------------------
சொல்லத் துடிக்கிற மனசுக்குள்
சொல்ல முடியாத காதல்
உன்றன் மௌனத்தை ரசிக்கின்றேன்
ரசிகனாகி!



4. அழியாக் கோலம்
-----------------------------------
விரலிடுக்குப் பேனாவும் 
..... எழுதிடுமே புரட்சியை/

பொறிகளை இயக்கியே 
..... ..உழைத்திடுமே தன்னம்பிக்கையாக/

உறவுகளைத் தழுவிடுமே 
..... அன்புக் கரமாகி/

உலகையே ஆண்டிடுமே 
..... உயிர்க்கும் செங்கோலாகி/

ரேகைகளும் வரைகின்றதே 
...... அழியாக் கோலமதை/

 


 5. உன் நினைவாய் நான்

---------------------------------------

இல்லறச் சுகமதில்/ 

இன்னுயிர்கள் கலந்தே/

இனிதாக வாழ்ந்திட்ட ஒவ்வொரு கணங்களும்/

அவிழ்கின்றன தனிமையில்/

6. விண்ணிலாவும் பெண்ணிலாவும்

கவிஞனின் பார்வையில் கற்பனைத் தேன்சுவையில்/

கன்னியவளும் நிலாவும் கவர்கின்றனர் அழகினில்/


பருவ மாற்றங்கள் பகிரும் வாழ்வினில்/

பருக்களும் குழிகளும் படர்ந்திடும் கன்னங்களில்/


வளர்தலும் தேய்தலும் வனப்பின் படிநிலைகளே

வனிதையின் நாணம்போல் விண்ணிலவும் ஒளியுமோ


உணர்வினைத் தூண்டுதே உருவத்தின் ஒத்திசைவும்/

உள்ளதே நிலையின்மை உணரலாம் நாமும்/


7. 
எல்லைகளில் வெடிக்கின்றதே யுத்தப் பிழம்புகள்
அல்லலைக் களைந்திடவே செல்லுகின்றாய் நீயும்
நல்லுறவுகளின் அன்பான வாழ்த்தும் ஆசியும்
வெல்ல வைக்குமே தாயக இலட்சியமதை

8.பண்பில்லா வன்மம்

-----------------------------------

காமத்தின் உச்சம்

.......கல்லறைக்கான பூவாசம்/

கற்பினைக் கொய்தே

........கண்ணீரைச் சூட்டுகின்ற/

கல்நெஞ்சர் களித்திடும்

........கலிகாலக் கோலமிது/

கனிகின்ற பெண்மையை

........கடித்தே குதறிடும்/

காமுகர் வேட்டையை

.........காலந்தான் தடுத்திடுமோ/


ஜன்ஸி கபூர் - 24.10.2020

9. தோற்றம்

--------------------

தோற்றம் காட்டாதே உள்ளத்தின் வலிமையை/

தோற்றே போவார் உருவத்தை அளவிடுவோர்/

அகமே ஆளுமே நமது வாழ்வினை/


10. துணையெனும் தோழமை

----------------------------------------------

அன்பை மொழிந்து/

ஆருயிர் தழுவி/

இனித்திடும் இல்லறத்தால்/

உணர்வினில் இசைந்திடும்/

ஊரறிந்த உறவு/


ஜன்ஸி கபூர் - 28.10.2020














No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!