அரும்பும் மழலைப் பருவமும் முட்களில்
பருவத்தின் சிறகுகளிலும் காயத்தின் பற்கள்
வருந்திடும் காலத்தில் வாழ்கின்றோம் நாமே
விரும்பாத பாலியல் வன்புணர்வுக்குள் பெண்மை
தாய்மையைக் கிழிக்கும் குரோத எண்ணத்தில்
தரணிக்குள் பதிக்கின்றார் பிணக்குழி கற்களையே
அணைக்கின்ற அன்புக்குள்ளும் முள்வேலித் திரையிட்டு
பிணைக்கின்றனர் வன்மத்தை அன்பின் பெயரில்
விழிகளில் கலந்திடும் காதலிலும் காமம்
அழகென போற்றிடும் உதட்டிலும் விடம்
பழகிடும் மாந்தர் நெஞ்சுக்குள்ளும் ஏமாற்றம்
தழுவிடும் பெண்மையைக் குதறிடுதே வன்மம்
பாவைக்கும் காவல்கள் வேண்டும் வாழ்வினிலே
தேவைக்குப் பயன்படுத்தும் பொருளல்லவே அவள்
போதைக்குள் காமமேற்றி சிதைக்கின்ற ஆன்மாவை
சிதைக்குள் தள்ளிடும் தீர்ப்பும் வேண்டுமே
நாவினிக்கப் பேசி கசக்கிடும் மூர்க்கத்தில்
நயவஞ்சகர் சூழ்ந்திருப்பாஅங்கத்தினையும் சுவைத்திட
மிருகமாய் இழிந்திருக்கும் மானுடம் மறந்தோரும்
அருகிலிருப்பதால் வேண்டுமே காவல் பெண்மைக்கும்
ஜன்ஸி கபூர் - 04.10.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!