திருமறை"மேலும் உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஹிக்மத் ( எனும் சுன்னத்தை ) தையும் நினைவுகூறுங்கள்.( அவற்றின் மூலம் உபதேசம் அடையுங்கள் ) நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவனாக                       
( யாவையும் )  நன்கறிந்தோனாக இருக்கின்றான்"  (33:34)"நிச்சயமாக  அல்லாஹ்வுடைய  வசனங்களை விசுவாசிக்கவில்லையே  அத்தகையோர்  அவர்களை , அல்லாஹ்  நேர்வழியில்  செலுத்த  மாட்டான்.  அவர்களுக்கு  துன்புறுத்தும்  வேதனையுண்டு  "      (16:104)


" இன்னும் விசுவாசங்  கொண்டு  நற்காரியங்களையும்  செய்கின்றார்களோ ,  அத்தகையோர்  அவர்கள்  சுவனவாசிகள்  , அதில்  அவர்கள்  நிரந்தரமாக (த்தங்கி ) இருப்பார்கள் "                                                          (2:82)


" நிச்சயமாக  அல்லாஹ்வுடைய  வசனங்களை  விசுவாசிக்கவில்லையே  அத்தகையோர்  அவர்களை  அல்லாஹ்  நேர்வழியில்  செலுத்த மாட்டான் , அவர்களுக்கு  துன்புறுத்தும்  வேதனையுண்டு "          (16 : 104)


" உங்களிடமுள்ளவை ( யாவும் ) தீர்ந்து  விடும் , அல்லாஹ்விடம் உள்ளதோ நிலைத்திருக்கும், பொறுமையைக்  கடைப்பிடித்தோர்க்கு  அவர்களுடைய கூலியை  அவர்கள்  செய்து  கொண்டிருந்தவற்றில்  மிக  அழகானதைக்  கொண்டு  திண்ணமாக  நாம்  வழங்குவோம்  "               (16 : 96) 


" ( மனிதர்களே ) நீங்கள்  வறுமைக்குப் பயந்து  , உங்கள்  குழந்தைகளைக்  கொலை  செய்யாதீர்கள்.  அவர்களுக்கும் ,  உங்களுக்கும்  நாமே  உண​வை
( வாழ்க்கைத்  தேவைகளை  )  வழங்குகின்றோம். நிச்சயமாக  அவர்களைக் கொலை  செய்வது  பெரும்  குற்றமாக  இருக்கின்றது "  (17 :31 )


" விசுவாசங் கொண்டோரே ,உங்கள்  வீடுகள் அல்லாத (வேறு) 
வீடுகளில்  (நீங்கள் நுழைய அவசியம் ஏற்பட்டால் ,அவ் வீடுகளில்  உள்ளவர்களிடம் ) நீங்கள்  (மூன்று  முறை ) அனுமதி  கோரி, அவ்வீடுகளில்  உள்ளோருக்கு  ஸலாம் கூறாதவரை அவற்றில் ) நுழையாதீர்கள் இவ்வாறு நடந்துகொள்வ) துவே  உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்  நீங்கள் நல்லுபதேசம்  பெறும்  பொருட்டு  ( இது  உங்களுக்குக் கூறப்படுகின்றது "  ( 24 : 27 )


அடுத்த பக்கத்திற்குச் செல்க

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை