தோற்றுப் போன வசந்தங்கள்
சோலைக்குள் தீச்சுவாலைகள்வேலியாய் முளைத்திருக்க.......வறுமையின் முகவரியாய் இவர்கள்வாழ்க்கை அடிக்கடி!தோற்றுப் போன வசந்தங்கள்இவர்களுக்கு.........வேரறுந்து போனதில்.............கண்ணீர்ச் சந்ததியினராய் - தம்மைஅறிவிப்புச் செய்கின்றனர் !ஒட்டியுலர்ந்த மேனியில்எட்டியுதைக்கும் என்புகளும்.......ஏக்கம் நிறைந்த வாழ்வும்இவர்களின்உரிமைகளாய் பிசைந்து கிடக்க...புறப்பட்டு விட்டனர்பசியின் நிழல்களில் கோலம் போட்டேதம் உயிரணுக்களில் மரணம் தேக்கி!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!