கவிதை அறிவாயோ
தேவதை என்றாய் - என்வாழ்வின் தேள்வதை யறியாமல்!கண்மணி என்றாய் - தினம்கண்ணீருக்குள் அழுகும் விம்ப மறியாது!உதிரும் புன்னகை அழகென்றாய்என் ரணங்களின் ஆழ மறியாது!உன் கனவுகள் நானென்றாய்வெட்டப்படும் பலியாடு நானென்பதை யறியாது!நிம்மதி நானென்றாய் - நிதம்நிம்மதி தேடும் ஆத்மா நானென்பதை யறியாது!எரியூற்றப்படும் எனக்காய்ஏக்கங்கள் வளர்க்கு முனக்காய்அனுதாப அலைகள் அனுப்பி விட்டே ன் மன்னித்து விடென்னை மானசீகமாய்......விடுதலை வேட்கைக்காய் விண்ணப்பித்தமரணக் கைதியிவள்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!