2012/06/08
வெளிநாட்டு வாழ்க்கை
பண வரவுக்காய்
அன்பைச் செலவளித்தே
இளைப்பாறிக் கிடக்கின்றோம்
ஏக்க நிழலில்!
கையேந்தும் வெள்ளிக்காய்
துள்ளியோடும் வசந்தங்கள்
மீள வரா(து)!
தெரிந்தும் கூட
தொலைந்து போகின்றோம்
வெளி நாட்டிற்கே!
கிலி கொள்ளும் வெளிநாட்டை
பலி சொல்லப் போனால்
தொழிலேதுமின்றி - எம்முள்
வலியே வாழ்வாய் ஆகும் !
உறவுகளை பணயம் வைத்து
இதயமதை இரும்புமாக்கி
கண்ணீரில் கரைந்தே நாம்
பணம் சேர்க்கின்றோம்
சொந்த மண் துறந்து!
கனவு வாழ்க்கைக்காய்
கல்லறை தேடித் தேடியே
அனலிட்ட மெழுகாய்
அகிலமெங்கும் சுற்றுகின்றோம்!
ஆகாய மாளிகைகளும்
ஆடம்பர வாழ்வின் எச்சங்களும்
அந்நிய பாஷைகளும்
வெந்நீர் தடவும் பாலையும் சொத்தாக
தொலைந்துதான் போகின்றோம்
தொலைதூர மண்வாசத்தில்!
வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள- எங்கள்
வாலிபம் தியாகமாகும்!
வெறுத்துப் போன தனிமைக்குள்
வேரறுந்து துடிக்கும் மனசோரம்!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Post Comments (Atom)
விரும்பி (!) ஏற்கும் தண்டனை...
ReplyDeleteஅறிந்தே (!) அடைந்திடும் வேதனை...
விலகிட (சிலருக்கு) இயலா சூழ்நிலை...
பழகிட (!) முயற்சித்து...மற(க்க)த்து போகிறது..."பாசமும்..ஆசைகளும்"!
# இருப்பினும் (வாய்ப்புள்ள) சிலர்...இந்த "வாழ்க்கையே" சுகமாகவே சுவாசிக்கிறார்கள்...!
அழகான பின்னூட்டம் நன்றி Sherkhan
Delete