இயற்கைச் சாளரத்தினூடு மெல்ல அலைகின்றேன்
பிம்பங்களாய் பேரழகு கரைகின்றது அதில்
காற்றில் கசங்கும் மரங்களின் மொழியில்
பசுமைப் புழுதி பாய்ந்தோடுகிறது விழியில்
தரை மோதி நுரை கக்கும் அலையில்
கரைந்தோடும் வெய்யோன் பொன்னிறக் கதிர்கள்
பாய்ந்தோடி கூதல் கோர்க்கும் நீர்வீழ்ச்சியில்
சாய்ந்தாடும் விழிகள் கனவுகள் சேர்க்கும்
விண் துளைக்கும் கார் மேகங்கள்
தூறல்களாய் வீழ்கையில் மழை பூக்கும்
இறைவன் வரையும் இயற்கை ஓவியம்
ரசிக்கையில் உணர்வெங்கும் உருவாகும் அற்புதங்களே
Jancy Caffoor
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!