வாழ்க்கைத் துணை


அமைதியான ஆற்றங்கரை ........அருகே விரல் விரித்துக் கொண்டிருக்கும் பரந்த ஆலமரங்கள் இரண்டு காற்றால் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு நின்றன...........அவ் ஆலமரங்களின் வேர்களை நனைத்தவாறு சிறு ஆறொன்று ஓடிக்கொண்டிருந்தது..

அக் குளிர்மையான நீரோடையின் அருகே வழமை போல் அந்த இரண்டு நட்பு புறாக்களும் சந்தித்துக் கொண்டன...அவர்களின் மடியை ஆலமரக் கிளை தாங்கிக் கொண்டது...

ஆண்புறாவுக்கு பெண் புறா மீது உயிர்........பெண் புறாவுக்கும் ஆண் புறாவே அதன் உலகமாக இருந்தது...பார்ப்பவர்கள் எல்லாம் அவைகளை காதலரென்று கிண்டல் செய்யும் போதெல்லாம் ஆண்புறா சிரிக்கும்........

"இது காதலையும் தாண்டி புனிதமானது..எங்க அன்பை நாங்க காதலுக்குள்ள சிக்க வைக்க விரும்பல........ஏன்னா காதல் வயப்படும் போது எங்க எதிர்பார்ப்பு அதிகரித்து , அன்புக்குள்ள சுயநலம் கலந்திடும் "

ஆண் புறாவின் வார்த்தைகளுடன் முரண்படாத பெண் புறா தன் நண்பனின் கன்னத்தை தன் உதடுகளால் தடவி, தன் அன்பை ஆழப்படுத்தி வெளிப்படுத்தும்.. இது தினமும் நடக்கும் நிகழ்வு.....................

ஆனால் அன்று வழமையான உற்சாகம் குன்றிய நிலையில் ஆண் புறா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது..

அதன் இறக்கையை தன் இறக்கைகளால் தடவிய பெண் புறா தன் குரலில் சோகம் பூட்டி மெதுவாக ஆண்புறாவை நோக்கியது

"ஏன்டா ....சோகமா இருக்கே..............என்னடா ஆச்சு......நீ இப்படி இருந்ததை நான் ஒருநாளும் பார்த்ததில்லையேடா...........என் மனசும் அழுகுது தெரியுமா"

பெண் புறாவின் வார்த்தைகள் தளம்பின.....

"செல்லம்....எனக்கு எங்க வீட்டில  கல்யாணம் பேசுறாங்கடா.......எனக்கேத்த பெண்ண நான்தானடா தெரிவு செய்யணும்....எங்க வீட்டில இப்ப கல்யாணம் வேண்டாமென்று சொன்னா.....நீ யாரையாவது லவ் பண்ணுறீயாடான்னு கேட்குறாங்க......யாரைடா நான் சொல்ல .......அதுதான் மனசு கஷ்டமா இருக்கு"

ஆண்புறா பெருமூச்சு விட்டது..

அதைக் கேட்ட பெண் புறா கலகலவென்று சிரித்தது..........

"டேய் .......லூசாடா நீ.........இதுக்குப் போய்..............கப்பியா இரடா.......யாராச்சும் கிடைப்பாங்க"

பெண் புறாவின் வேடிக்கைச் சீண்டலை ரசிக்கும் மனநிலை ஆண் புறாவுக்குள் எழவில்லை..

"இல்லையடீ......இன்னும் ஒரு வாரத்தில நான் பொண்ணு யாருன்னு சொல்லணும்..இல்லைன்னா அவங்க பார்க்கிற பொண்ணத்தான் கட்டணும்.
என்னை புரிஞ்சு கொண்டவள் நீதான்டீ....என் லட்சியம் உனக்குத் தெரியும் தானே.........நீயோ இப்படி சொன்னா நான் என்னடி செல்லம் பண்ண......இன்னும் ஒரு கிழமைக்குள்ள எனக்கேத்த பொண்ண எப்படியடீ தேட.....நீயே சொல்லடீ!

ஆண்புறாவின் குரலில் இருந்த வருத்தம் பெண் புறாவையும் நோகடித்தது....

"ம்...யோசிப்போம்டா.......இன்னும் 1 கிழமை இருக்கு.......நல்ல முடிவு கிடைக்கும்.....நம்படா.............நம்பிக்கைதான் வாழ்க்கை "

"ம்....ம்"

ஆண் புறா சிறிது மௌனத்தின் பின்னர் மெதுவாகத் தலையாட்டியது..
அவர்களின் மௌனத்தில் சில விநாடிகள் கரைந்து கொண்டிருக்கும் போது திடீரென பெண் புறா ஆற்றுக்குள் குதித்தது...

"செல்லம்........"

ஆண்புறா அதிர்ச்சியில் அலறியவாறு தானும் நீருக்குள் குதித்தது..தன் நண்பியை நீருள் தேடியது. அதன் பார்வைக்குள் அவள் அகப்படவேயில்லை..
நீரின் சலன ரேகை சப்தமின்றி அமைதியாக உறைந்து கிடந்தது

பெருங்காட்டுக்குள் கண்ணைக் கட்டி விட்ட நிலை ஆண்புறாவுக்கு........

இதயம் வெடிப்பதைப் போன்ற உணர்வு.....வாழ்க்கையில் எதையோ இழந்த தவிப்பு முதன்முறையாக மனசுக்குள் முட்டியது

"செல்லம்...................."

வாய் விட்டு கதறியவாறு, அவளை மீண்டும் காண வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் கண்களை இறுக மூடி இறைவனிடம் தன் பிரார்த்தனையை ஒப்புவிக்கத் தொடங்கியதுதான் தாமதம்............

"ஏய்"

காதருகே மெல்லிய சலங்கையொலி சலசலக்க ஆண்புறா எதிரே பார்த்தது...
நம்பவே முடியவில்லை..தன் நேசப் பறவை ஈரம் சொட்டச் சொட்ட எதிரில் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும் மகிழ்ச்சியில் மனசு ஆரவாரித்தது..

":என்னடி இப்படி பண்ணிட்டே......நான் இன்னைக்கு உனக்காக எவ்வளவு அழுதேன் தெரியுமா..என்ன விட்டுப் போக உனக்கு மனசிருக்காடீ...என்னை அழவைக்கிறதே உனககு வேலையாச்சு "

ஆண்புறா உணர்ச்சி வசப்பட்டு பெண்புறாவைக் கடிந்தது..

"இல்லைடா நாம பேசிக் கொண்டிருந்த போது மரத்தில இருந்த சின்ன அணிலொன்று தண்ணிக்குள்ள விழுந்திடுச்சு.அதுதான் அதைக் காப்பாத்த போனேன்."

பெண் புறாவின் வார்த்தைகளில் வடிந்த இரக்க குணம் ஆண்புறாவின் விழிகளை மேலும் குளமாக்கியது ..மனசோரம் காதலெனும் பதிய மெல்லுணர்வு வருடிச் சென்ற உணர்வு..........பாய்ந்து சென்று பெண்புறாவை இறுகத் தழுவியது .........

பெண்புறாவோ தடுமாறியது....

"டேய் விடடா........உனக்கென்னடா ஆச்சு இன்னைக்கு ...நான் உன் ப்ரெண்டடா..............."

குரல் நெகிழ பெண் புறா கூறியது,

"செல்லம்.......உன் உயிரைக் கூட மதிக்காம அந்த சின்ன உயிரைக் காப்பாத்த நெனைச்ச உன்ன விட, என் வாழ்க்கை, உயிர பத்திரமா யாரடீ பார்த்துக்குவா...அதுதான் என் உசுரை உன்கிட்டயே கொடுக்க முடிவெடுத்திட்டன்...................புரியலியா"

அண் புறா கண்சிமிட்டலுடன் கேட்ட போது. பெண் புறா "ம்ஹூம்" இல்லையென தலையாட்டியது..

"ரியூப் லைட் செல்லம்டீ நீ......என் வாழ்க்கையைய நல்லா கவனிச்சுக்க உன்ன விட யாரடீ வருவா.அதுதான் என் வாழ்க்கைத் துணை நீயென்று முடிவெடுத்திட்டேன்...ஐ லவ் யூடீ"

பெண் புறாவின் இறக்கையை தன் அலகினால் மெதுவாகத் தடவியது  , பெண் புறாவோ நாணத்தில் தலை சாய்ந்து புன்னகையை மௌனத்தில் நனைத்துக் கொடுத்தது..

"ஐ லவ் யூ "

பெண் புறாவும் இதழசைத்தது.........

"ஹைய்யா...மகராணியார் சம்மதிச்சிட்டாங்க...........இனி டும் டும் டும் தான்"

ஆண் புறா உற்சாகத்துடன் கும்மாளமடிக்க, அங்கே புதிய காதல் உலகமொன்று அவர்களை உள்வாங்கிக் கொண்டது...............

2 comments:

  1. super......................ungalin ninavugl(kavithai n kadurai) ulakil erulinra yallarium... oru nimedam...yosigavum,santhosa paduthavum, napaga paduthavum,amathi paduthvum,kankalga vaikavum... seeium yanpathil yatha oru sathagamum illai...

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை