கண்ணேறு என்பதை கண்ணூறு, நாகூறு, திருஷ்டி என்றெல்லாம் அழைப்பார்..ஒருவர் இன்னுமொருவரை அல்லது அவர் பொருளை ஏக்கத்துடன் அல்லது பொறாமையுடன் பார்க்கும் போது உரிய பொருளுக்கு அல்லது ஆளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பலரும் கூறுவதை அவ்வவ்போது கேள்விப்படுகின்றோம்.
உண்மையில் கண்ணேறு உள்ளதா?
இஸ்லாம் இதற்கு அனுமதியளித்துள்ளதா?
இவ்வாறாக என்னுள் தேங்கிய வினாவுக்கு விடை தேடினேன்...என் தேடலுக்கு கிடைத்த ஆதாரங்கள் இவைதான்.......
"கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்"
அறிவிப்பவர் - அபுஹூரைரா (ரலி) , நூல் : புஹாரி முஸ்லிம்
"நபி (ஸல்) அவர்கள் கண்ணேறுவின் (தீய விளைவி) லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் "
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள்
ஆதாரம் - புஹாரி
கண்ணேறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் பின்வரும் துஆ வை ஓதிக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் ...
"அவூது பிகலிமாத்தில்லாஹித் தாமத்தி மின்குல்லி ஷைத்தானின் வஹாமத்தின் வமின் குலவி அய்னின் லாம்மத்தின்"
பொருள்-
----------------
அல்லாஹ்வின் நிறைவான வார்த்தைகள் மூலம் ஒவ்வொரு சைத்தானை விட்டும். விஷ ஜந்துக்களை விட்டும், கெட்ட கண்திருஷ்டியை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகின்றேன் ) ஆதாரம் - முஸ்லிம்
எனவே ஒவ்வாத நிலைமைகளில் நமக்கேற்படும் கண்திருஷ்டிகளை நாமும் தவிர்ப்போமாக
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!