5 எஸ் என்பது பணித்தள அல்லது பணியிட அமைப்பு முறையைக் குறிப்பதாகும்.இது யப்பானியர்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானியப் பொருள்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும் .
2 வது எஸ் - செய்டன் - நிலைப்படுத்து (Stabilize)
3 வது எஸ் - செய்ச்சோ - ஒளிர் (Shine)
4 வது எஸ் - செய்கொட்சு - தரப்படுத்து (Standardize)
5 வது எஸ் - ஷிட்சுகே - நீடிக்கச் செய் (Sustain)
இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குபடுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும்.
-----------
இது பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றுள் தேவையானவற்றைத் திரட்டி தேவையற்றதை அப்புறப்படுத்தும் செயலைக் குறிக்கும்.
செய்டன் -
-------------
இது பொருட்களுக்குரிய இடத்தையும் ,இடத்துக்குரிய பொருட்களையும் தேர்ந்தெடுத்து பெயர்க்குறியீட்டுடன் பராமரிக்கும் செயலாகும். இச்செயல் ஒவ்வொரு பணியையும் எளிமைப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
செய்சோ
------------
இது பொருட்களையும் பணித்தளத்தையும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை குறிக்கும் சொல். பணித்தொடக்கத்திலும், பணிமுடிவிலும் பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்வதை வழக்கப்படுத்தி கொள்வதை வற்புறுத்தும் சொல்லாகவும் இது அமைகின்றது. அசுத்தமான பொருட்களை சுத்தம் செய்யும் போது பொருட்களின் தரக்குறைபாடுகள் இருக்குமானால் அவற்றை வெளிப்படுத்தவும் நீக்கவும் இம்முறையால் முடிகின்றது. இதனால் வாடிக்கையாளருக்கு தரமான பொருட்கள் மட்டுமே சென்றடைகின்றது.
செய்கொட்சு
-------------------
இது முன் சொல்லப்பட்ட 3 செயல்களை வரையறுக்கப்பட்ட வழிமுறையில் செய்வதைக் குறிக்கும் சொல்லாகும். இந்த வரையறைகள் பொறுப்புக்கள், பொறுப்பாளர்கள், செய்முறைகள், செய்கருவிகள் இவை யனைத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஷிட்சுகே-------------
இது முன் சொல்லப்பட்ட 4 செயல்களையும் தொடர்ச்சியாகவும் தொய்வில்லாமலும் தன்னொழுக்கத்துடனும் செய்வதைக் குறிப்பதாகும்.
ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை அழகாகவும் நேர்த்தியாகவும் வாழ ஆசைப்படுவதும் முயற்சிப்பதும் இயற்கை. அதன் பொருட்டு நல்ல விடயங்களின்பால் தேடல்களும், அவை தொடர்பான பின்பற்றுகைகளும் நமக்குள் இருக்க வேண்டும். இதற்கு யப்பானின் 5 எஸ் முறையும் நமக்கு பயிற்சியளிக்கின்றது.
நல்ல தகவல்
ReplyDeleteநன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉண்மைதான் 5s முறையை கடைப்பிடித்தால் ஒரு தொழிச்சாலையோ அல்லது அலுவலகம் வீடு நன்றாக இருக்கும்... இந்த முறை இலங்கையில் அமுழுக்கு வந்தால் சிறப்புஎன்றுதான் சொல்ல முடியும்...
இந்த 5s முறையில் LEVEL-5 ,இருக்கிறேன்... எமது வேலையை இலகு படுத்தும்... இது சம்மந்தமாக நான் படித்துக்கொண்டுதான் இருக்றேன் இப்பொழுதும்...
தங்களின் தலைப்பை பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன்..இது சம்மந்தமான பதிவை தொடருங்கள்..காத்திருக்கேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஇந்த யப்பன் 5S முறை இலங்கையில் நடைமுறை படுத்தப்பட்டால் இலங்கை இன்னும் வளர்ச்சி அடையும். எனவே நாம் வேலை செய்யும் வேலை தளத்திலும் பொது இடத்திலும் வீடுகளிலும் இதை நடை முறைக்கு உட்படுத்துவோம்
ReplyDeleteநன்றி
நன்றி
Delete