முதியோர் இல்ல முகவரிகள்தோற்றுப் போன பாசங்களின்
ஒன்றுகூடல்களிங்கே.........
ஒத்திகை பார்க்கின்றன
குற்றுயிராய் வீழ்ந்து கிடந்து!

முதுமை சுரண்டப்பட்ட வாழ்வின்
முற்றுப் பெறாத பக்கங்களாய்
இவர்கள்...............
வேராகின்றனர்!
வெட்ட வெளிக்குள் அடிக்கடி!

பழசாய் போன மனசிலும்
சீழ் வடியும் விரக்தித் துளிகள்
சீண்டி விளையாடுது அடிக்கடி
அட்டகாஷமாய்!

காவோலைகளின் உணர்வறுக்கும்
குருத்தோலைகள்............
கனவுகளை உருத்துலக்கியே
மறக்கின்றனர் மனிதங்களை!

தொலைவாகிப் போன உறவுகளால்
துக்கியெறிக்கப்பட்ட இவர்கள்......
தரிசு நிலத்தின்
பதர் விதைகள்!

இந்த..................
முதியோர் இல்ல முகவரிகள்
சேர்க்கப்படாத கடிதங்கள்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை