மண வேலி!


நீ- என்
இனிய கவிதை!

நாதஸ்வரத்தின் நளினத்தோடு
என்னுள் நார்த்தனமாடியவுன்னை.......
விலங்கிட்டுக் கொண்டேன்
என்னவளாய்!

நீ நடக்கையில்.....
எனக்குள் கிசுகிசுக்கும் - உன்
மெட்டியொலியின் மெட்டோசை
கெட்டி மேளம் கொட்டும் - என்
ஹிருதய நுழைவாயிலை
அடிக்கடி எட்டிப் பார்த்து !

அடி .........பெண்ணே!
நம் புதுவுறவுள் - நானோ
புளாங்கிதமடைய................
நீயோ புன்னகைக்கின்றாய்
அந்தப் புது நிலவாய்.............
என்னவளாய்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை