ஒற்றை மழைத்துளி!சாம விழிகளின் துயிலுக்குள் - என்
கனவுகள் அமிழ்ந்து கொண்டிருக்கும்!

முகவரியில்லாக் காற்றில் - என்
ஆன்மாவின் சிதறல்கள்
அலைந்து கொண்டிருக்கும் !

கவலை நுரைக்குள்
கரைந்து போன என் ஜீவன்
ஜீவிதத்தை தேடிக் கொண்டிருக்கும் !

நிதமும் என் சுவாசிப்பை
பொசுக்கும் வெம்மை
பெருமுச்சில் ஆவியாகத் துடிக்கும்!

வறுமை வலைக்குள் சுருண்ட
என் வாலிபம்
வெறுமையைத் தேடிக் கொண்டிருக்கும்!

சிரிக்க எனக்கும் ஆசைதான்....!
யதார்த்தப் பயமுறுத்தல்களில்
புன்னகை வேர்கள்
மரணித்துக் கொண்டிருக்கும்!

ஓ........................!
இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை!
ப்ரிய நேசங்களின் சேமிப்பில்
இத்தனை துரோகங்களா!

இத்தனை வலிக்குள்ளும்
ஒற்றை மழைத்துளியாய் - நான்
தனிமைச் சிறைக்குள்
நனைகின்றேன்................
விதியை நொந்தபடி!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை