மரபணு சிகிச்சை- டெங்கு

Photo: டெங்கும் மரபணு சிகிச்சையும்
-------------------------------------------
இன்று எமது நாட்டில் வேகமாகப் பரவி வரும் ஆட்கொல்லி நோயாக டெங்கு காணப்படுகின்றது..'எடிஸ் எஜிப்டே' எனப்படும் பெண் நுளம்பால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
இந் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் புதிய முறையாக மரபணு மாற்றச் சிகிச்சை பயன்படுகின்றது.

இம் முறையின் கீழ் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடிகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் நுளம்பின் மூலம், பெண் நுளம்புகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றின் உற்பத்தியை தொடர்ந்து குறைக்க முடிகின்றது

நுளம்பின் 'டி.என்.ஏ.,'வில் குறிப்பிட்ட ஜீனை கண்டறிந்து அவற்றின் மரபை மாற்றுகிறோம். எந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதோ, அங்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களை பறக்கவிட வேண்டும். இதன் மூலம், இனப்பெருக்கத்தின் போது, பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் வலிமையற்றதாகவும், கடிக்கும் திறன் குறைந்ததாகவும் இருக்கும் இதன் மூலம் கொசுக்களின் சந்ததியை கட்டுப்படுத்தலாம், நோய் பரவுவதையும் தடுக்கலாம். இந்த முறையை மலேசியா பின்பற்றுகின்றது

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.பழமொழிகள் யாவும் அன்றாட வாழ்வியலின் அனுபவங்களை அடியொற்றுபவை.......நோய் வந்த பின்னரே அது தொடர்பான சிந்தனையில் நம் காலத்தை விரட்டுவது பொதுப்படையான உண்மையாகும்.

இன்று மக்கள் எதிர்நோக்கும் பயங்கரமான தாக்குதலில் டெங்கு நோயும் ஒன்றாகும். ஏனெனில் இது ஓர் ஆட்கொல்லி நோயாகும். "எடிஸ் எஜிப்டே" எனப்படும் பெண் நுளம்பால் டெங்கு நோய் பரவுகின்றது.

இந்நோயைக் கட்டுப்படுத்த பலமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. "கப்பிஸ் " மீன் வளர்ப்பு மூலம் நுளம்புக் குடம்பிகளைக் கட்டுப்படுத்தல்,  நோய்க்காவிகளின் கட்டுப்பாடு, வைரசுக்கான தடுப்பு மருந்து, வைரசுக்கெதிரான தடுப்பு மருந்து என ஆராய்ச்சிகளும் , நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னுமொரு புதிய முறையாக டெங்குக்கான மரபணுச்சிகிச்சையைக் கருதலாம்.

இம்முறையின் கீழ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண்நுளம்பின் மூலம் பெண் நுளம்புகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து அவற்றின் உற்பத்தி குறைக்கப்படுகின்றது. இது இந்நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் புதிய முறையாகும்.

நுளம்பின் "டி.என்.ஏ" யிலுள்ள ஜீனைக் கண்டறிந்து அவற்றின் மரபு மாற்றப்படுகின்றது. இதனால் பெண் நுளம்பு இடும் முட்டைகள் வலிமைகுறைந்ததாக மாறுகின்றது. இதனால் நுளம்பின் சந்ததி ஆரோக்கியமற்றதாக மாறுகின்றது. இம்முறைக் கட்டுப்பாட்டில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நாடாக தற்போது மலேசியா விளங்குகின்றது.

இந்த டெங்கு நுளம்பின் வரலாறு தொடர்பான சில தகவல்கள்
----------------------------------------------------------------------------------------
இந் நோயின் ஆரம்பமாக சீனா விளங்குகிறது. (265- 420 கி.பி).அப்பொழுது இந்நோய் பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் ஏற்பட்டதாகக் கருதினார்கள்.

அதன் பிறகு பரந்த தொற்றின் தாக்குதலுக்கு 1635 ல் மேற்கிந்திய தீவுகள் உள்ளானது.

1779- 1780 ஆண்டுப் பகுதியில் தான் முதலாவது தொற்று நிகழ்வு ஆசியா, ஆபிரிக்கா, வடஅமெரிக்கா போன்ற பகுதிகளில் ஓரே நேரத்தில் நிகழ்ந்தது. இந்நோயை "எலும்பு முறிப்பு நோய்" என்றனர்.

1820 ன் முற்பகுதியில் கிழக்கு ஆபிரிக்காவில் இந்நோய் கண்டறியப்பட்டது.இதனை "கெட்ட  ஆவியால் திடீரென உண்டாகும் நோய்" என சுவாகிலி மொழியில் அழைத்தனர்.

1827- 28 ஆண்டளவில் கரிபியனில் இத் தொற்று ஏற்பட்டது. ஸ்பானியா கரிபியர்கள் இதனை "டெங்கு" என அழைத்தனர்.

1906 ம் ஆண்டு "ஏடிசு " நுளம்பால் இந்நோய் ஏற்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

டெங்கின் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழப்புக்கள் பலஅதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில்  அந் நோய் தொடர்பான தகவல்களை தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து பெற்று இத்துடன் இணைக்கின்றேன்.

நோயின் அறிகுறிகள்
-----------------------------

நோயின் பருவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்: அவையாவன:
காய்ச்சல்
கடுமையான பருவம்
மீள்நிலைப் பருவம்

 நோயரும்பு காலப் பகுதியை அடுத்து, முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி மிகையாகும். உடல் வெப்பநிலை 40 °C (104 °F)க்கு மேற்செல்லும், இதனுடன் கடுமையான தலைவலி, குறிப்பாக கண்களின் பிற்புறத்தே வலி தோன்றும். 

இப்பருவத்திலே தோன்றும் ஏனைய அறிகுறிகள் ஆவன:
--------------------------------------------------------------------------------------------------
 • தலைவலி
 • கண் பின்புற வலி
 • பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
 • குமட்டலும் வாந்தியும்
 • வயிற்றுக்கடுப்பு
 • தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
 • களைப்பு
 • சுவை மாற்றம்
 • பசியின்மை
 • தொண்டைப்புண்
 • மிதமான குருதிப்போக்கு 
 • வெண்குருதி சிறுதுணிக்கை, குருதிச்சிறுதட்டுக்கள் குறையும் . 
Outline of a human torso with arrows indicating the organs affected in the various stages of dengue fever
டெங்கு நோயின் உணர், அறிகுறிகள்


காய்ச்சல் தொடங்கியுள்ள காலப்பகுதியில் தோல் நமைச்சல், சினைப்பு தோன்றக்கூடும்.
தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்து நோயில் உண்டாகும் சினைப்பைப் போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் போன்ற தோற்றம் பெறும்.
முதலில் உடலிலும் பின்னர் முகத்தில் நமைச்சல் தோன்றும். இந்நிலையில் குருதிமயிர்க்குழாயில் கசிவு ஏற்பட்டு அதனால் வாய், மூக்கு போன்ற பகுதிகளில் குருதிப்போக்கு உண்டாகலாம். கடுமையான நிலையில் சுவாசச் சிக்கல், வயிறு புடைத்தல், கடும் குருதிப்போக்கு , வாந்தி, வயிற்றுவலி, அமைதியின்மை போன்றவை ஏற்படும்.

மெதுவாக நிகழும் மீள்நிலைப்பருவத்தில் தாழ் இதயத்துடிப்பு , வலிப்பு, சுயநினைப்பிழத்தல் என்பன ஏற்படலாம். கல்லீரல் பாதிக்கப்படும் போது இது டெங்கு கல்லீரல் அழற்சி எனப்படும்.

இந்நோயை உடனடியாகக் கண்டறிய குருதியடக்குவடப் பரிசோதனை பயன்படுகின்றது. இப்பரிசோதனையின் கீழ் குருதியழுத்தமானியின் குருதியடக்குவடத்தை 100 மில்லி மீட்டர் இரசம் அழுத்தத்தில் 5 நிமிடங்கள் வைத்து உடனே சிவப்புப் புள்ளிகள் தோன்றுகின்றனவா என்பதை அவதானிக்கப்படுகின்றது...

எமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரை இந்நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு செயற்றிட்டங்களும், சூழல் அசுத்தம் பேணுவோருக்கு சட்டத்தின் தண்டனைகளும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன..

மரண அச்சுறுத்தல் தரும் இந்நோயைக்கட்டுப்படுத்த நுளம்புகளை அழிப்பது இன்றியமையாத கடமையாகும்.

(நுளம்பு = கொசு)
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை