இயற்கை உன் வசம்


பிரமாண்ட அண்டம்
பிரபஞ்சம் பிளக்கும் அணு.......
தோற்றுப் போகும் - உன்
அன்பின் வலிமையில்!

உன் நெற்றிப் பிறையின்
நேச வாசிப்புக்களில்............
கிறங்கிய கருங் கீற்றுக்கள்
ரேகையாய் படிந்திருக்கும்!

என் நெஞ்ச பிரமிட்டுக்களின்
நினைவகம்......நிரம்பி வழியும்
உன் நேசத் திரட்டுக்களால்!

உன் சிரிப்பொலி கேட்டால்.......
பாதாளச் செடியில் பூக்கள்
மெல்ல எட்டிப் பார்க்கும்!

நீ நடக்கையில்..........
புவியோட்டின் முகப்பேட்டில்
"ஸ்பரிசம்"
வெட்கித்துக் கிடக்கும்!

உன் கன்னச் சிவப்பில்
நொருங்கிப் போகும் - என்
நெஞ்சத்து கருமச்சம் !

உன் கரம் தொடுகையில்
பூமேனி முறையிடும் - தன்னுடமை
உன் வசமிருப்பதாய்!

தீ நாக்கொளி
முறைத்துக் கொள்ளும் - உன்
மேனியழகில் பொறாமை கொண்டு!

உன் வியர்வையில்
மேனி சிலிர்க்கையில்...........
முகில் கைக்குட்டைகள்
உன் முத்துக்களை முத்தமிடும்
மிருதுவாய்!

இயற்கையின் காதலில் - உன்
இதயம் சுருளுகையில்..............
விண்வெளி அறிவிப்புச் செய்யும்
இன்னொரு நிலா நீயென!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை