ஒலிம்பிக் போட்டி


2012 ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் எதிர்வரும் 27 ம் திகதி (2012.07.27 ---12.08.2012) ஐக்கிய ராஜ்ஜியத்தின் லண்டன் மாநகரத்தில் நடைபெற இருப்பது யாவரும் அறிந்ததே! ஒலிம்பிக் பூங்காவானது  கிழக்கு இலண்டனில் ஸ்ட்ராஃபோர்டில்  200 எக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் லண்டன் ஒலிம்பிக் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வையொட்டி என் விசைப்பலகையும் சில ஞாபகங்களை வலைப்பூவில் பதிக்கின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டியே ஒலிம்பிக் ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது.

ஒலிம்பிக் போட்டியானது கி.மு 776 ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஆரம்பமானது. தடையேதுமின்றி 4 வருடங்களுக்கொரு முறை கிரமமாக நடைபெற்ற இப் போட்டியானது கி.பி.393 வரை தொடர்ந்து நடைபெற்றது

கிரேக்க கவிஞர் பானாஹியோடியஸ் ஸௌட்ஸாஸ் என்பவர் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.


பின்னர் கி.பி 393 ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இப் போட்டிக்கு தடை விதித்தமையால் போட்டி நிறுத்தப்பட்டது.

1890 ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிரேக்கர்கள் தமது கடவுள்களில் ஒருவரான "ஜியஸ்" எனும் கடவுளைப் போற்றும் வகையில் திருவிழா கொண்டாடுவார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்த ஒலிம்பிக் போட்டியாகும். அப்பொழுது கிரேக்க சாம்ராஜ்ய எல்லைகள் ஸ்பெயின் துருக்கி வரை வியாபித்திருந்த நிலையில் கிரேக்கர்கள் மட்டும் இப் போட்டியில் பங்குபற்றினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு "ஆலிவ் இலைகளால்" ஆன கிரீடம் சூட்டப்பட்டது.

அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் முன்னிலையில் பல நாடுகள் பங்குபற்றும் ஒலிம்பிக் போட்டி 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1896.04.06ல் எதென்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பேரன் பியரி டி குபர்டின் எனும் பிரான்ஸ் நாட்டவரின் முயற்சியால் மீண்டும் இப் போட்டி புதுப்பிக்கப்பட்டது.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகள் கலந்து கொண்டன..தடகள போட்டிகள் , குத்துச் சண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன..

ஒலிம்பிக்கின்  11 வது நாள் மரதன் ஆரம்பிக்கப்பட்டது1914 ம் ஆண்டு பேரான் டி குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக வெள்ளை நிறமான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் கையளித்தார். இக் கொடி 1913 ல் வடிவமைக்கப்பட்டு 1914 ல் அங்கீகரிக்கப்பட்டு 1920 ல் நடைபெற்ற ஆன்ட்லெப் நகர ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்டது. 1984 வரை இக் கொடியே பயன்படுத்தப்பட்டது.

1988 சியோல் ஒலிம்பிக்கில் பழைய கொடி மாற்றப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த 2 வது ஒலிம்பிக் போட்டியில் முதன் முதல் பெண்கள் 3 விளையாட்டுக்களில் அனுமதிக்கப்பட்டனர். கோல்ப், வில்வித்தை,டென்னிஸ் என்பனவே அவ் விளையாட்டுக்களாகும்.

1928 ல் பெண்கள் தடகள போட்டியில் பங்குபற்ற அனுமதி கிடைத்தது.

இருந்தும் ஒருசில நாடுகள் பெண்கள் அனுமதியை மறுத்து விட்டன.        இன்றும் சில நாடுகளில் பங்குபற்றும் பெண்கள் விமர்சனத்திற்குள்ளாகி நிற்கின்றனர்.

தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

1908, 1948, ஆகிய ஆண்டுகளில் இப் போட்டி லண்டனிலேயே நடத்தப்பட்டது. மூன்றாவது முறையாக லண்டனில் நடத்தும் பெருமையை லண்டன் பெற்றுள்ளது. முதலிடத்தில் 4 முறை நடத்திய அமெரிக்கா உள்ளது.

ஒலிம்பிக்கில் தம் சாதனைகளை நிலைநாட்டி பதக்கம் சூடுவது போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு வீரர்- வீராங்கனைகளின் கனவாகவே உள்ளதுஇம்முறை நடைபெறவுள்ள போட்டித் தலைப்புக்களாவன:

1. தட கள விளையாட்டுக்கள்
2. நீர் விளையாட்டுக்கள்                                                    
3. சீருடற் பயிற்சிகள்
4. தற்காப்புக் கலைகள்
5.ஊர்தி ஓட்டங்கள்
6. குழு விளையாட்டுக்கள்
7. கருவி விளையாட்டுக்கள்
                                         
நடத்தும்- நகரம்இலண்டன்இங்கிலாந்து
பங்குபற்றும்- நாடுகள்148 (தகுதி)
204 (எதிர்பார்க்கப்படுவது)
பங்குபற்றும்- வீரர்கள்10,500 (எதிர்பார்ப்பு)
நிகழ்ச்சிகள்302 - 26 விளையாட்டுக்கள்
ஆரம்ப- நிகழ்வுஜூலை 27
இறுதி- நிகழ்வுஆகஸ்ட் 12

அரங்கம்ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
இம்முறை ஒலிம்பிக் நிகழ்வில் "வணக்கம்" ஒலித்தது. இது தமிழுக்கு கிடைத்த பெருமை எனலாம்.

உலகப் போர் நடைபெற்ற காலங்களைத் தவிர்த்து 1896 ம் ஆண்டு முதல் 4 வருடங்களுக்கொரு முறை நடத்தப்பட்டு வருகின்றது.

ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடுகள் பின்வருமாறு :

வருடம்இடம்வருடம்இடம்
1896ஏதென்ஸ், கிரீஸ்1900பாரீஸ், பிரான்ஸ்
1904செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA1908லண்டன், இங்கிலாந்து
1912ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்1920ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924பாரீஸ், பிரான்ஸ்1928ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA1936பெர்லின், ஜெர்மனி
1948லண்டன், இங்கிலாந்து1952ஹெல்சின்கி, பின்லாந்து
1956மெல்போர்ன், ஆஸ்திரேலியா1960ரோம், இத்தாலி
1964டோக்கியோ, ஜப்பான்1968மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972ம்யூனிச், ஜெர்மனி1976மாண்ட்ரீல், கனடா
1980மாஸ்கோ, சோவியத் யூனியன்1984லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988சியோல், தென் கொரியா1992பார்சிலோனா, ஸ்பெயின்
1996அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA2000சிட்னி, ஆஸ்திரேலியா
2004ஏதென்ஸ், கிரீஸ்2008பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012இலண்டன், ஐக்கிய இராச்சியம்2016ரியோ டி ஜனேரோ, பிரேசில்


லண்டன்: முற்றிலும் பெண்களைக் கொண்ட பாப் குழுவான ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவினர், லண்டன் ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஒரு கச்சேரி செய்யவுள்ளனர்.2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை