About Me

2012/07/26

பாரதம்


தென்னாசியாவிலுள்ள குடியரசுகளுள் ஒன்றே பாரதம் என அழைக்கப்படும் இந்தியாவாகும். இப்பெயர் சிந்து நதியெனும் பெயரிலிருந்து மருவி வந்துள்ளது.

இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங் கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக மேற்கே பாகிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம் , கிழக்கே வங்காளதேசம், மியான்மார் ஆகியவை அமைந்துள்ளன.


கி.மு.300ல் அசோகரால் கட்டப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சி தூபம் போன்று 40,000 வருடங்களுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, மத்திய இந்தியாவிலுள்ள பிம்பேடகா  என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.









மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலமாகும். சேர, சோழ, பல்லவ, சாளுக்கிய கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு கால கட்டங்களில் ஆண்டன. 8ம் நூற்றாண்டில் அரபியரும், 12 ம் நூற்றாண்டில் துருக்கியரும், 15 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வர்த்தகர்களும் வருகை தந்தனர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக காந்தியடிகள் தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் காரணமாக 1947 ஆகஸ்ட் 15 ல் விடுமுறை கிடைத்தது. அன்றே இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. 1950 ஜனவரி 01 ல் குடியரசாக மாறியது. இன்று உலகின் மிகப்பெரிய குடியரசாக இந்தியா திகழ்கின்றது
















இந்தியக் குடியரசு தலைவர் 5 ஆண்டுக்கொருமுறை தெரிவு செய்யப்படுகின்றார். ஆனால் செயலதிகாரம் பிரதமரிடமும், அவரது தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமுமே உள்ளது. இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும்.  மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள்  மாநில பிரதேச சட்டப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்களது ஆட்சிக்காலம் 6 வருடங்களாகும்.

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன.  1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதில் இருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. இந்தியா பொதுநலவாய நாடு, அணிசேரா நாடுகளின் இயக்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றது. அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்குஆசிய நாடுகள் கூட்மைப்பிலும் "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது.




இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.Operation Smiling Buddha எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 

இந்திய நாடு 28 மாநிலங்கள் 600 மாவட்டங்கள் 6 ஒன்றியப்பகுதிகளைக் கொண்ட ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும். பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத் தொடர்கள் , இந்து - கங்கைச் சமவெளி , மேற்கில் தார் பாலைவனமாகும் .

இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கையும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை வங்களா விரிகுடாவில் கலக்கின்றன. ஆரியோ மொழி, திராவிட மொழிக் குடும்பம் பெரிய மொழிக்குடும்பமாகக் காணப்படுகின்றது. இந்துக்கள் பெரும்பான்மையினராகவும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றனர். இந்து சமயம், புத்த சமயம், சமணம், சீக்கிய சமயம் பிரதானமான சமயங்களாகும்.

குடிமக்களுக்கான விருதுகள்
-----------------------------------------
பாரத ரத்னா
பத்ம விபூஷண்
பத்ம பூஷன்
பத்மஸ்ரீ

பிறப்பு , தொழில், பொருளாதாரம், மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆன சாதிய கட்டமைப்பே சமூக கட்டமைப்பாகும்..பல பிரதேசங்களில் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

இந்திய பண்பாடானது பல இன , மொழி, சமயங்களின் பன்முகத்தாக்கங்களாக உள்ளது. இசை, நடனம், இலக்கியம் இந்தியப்பண்பாட்டுள் தாக்கம் செலுத்துகின்றது. இசைகளுள் வடக்கில் கர்நாடகமும், தெற்கில் இந்துஸ்தானியும் பிரபல்ய முகங்களாக உள்ளது. அவ்வாறே நடனத்துள் பரத நாட்டியம், கதகளி,ஒடிசி, குச்சிப்புடி, கதக் போன்றவை பிரபல்யமானவை.
ஐம்பெருங் காப்பியம், மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட காப்பியங்களும், காவியங்களும் இந்தியப்பய்பாட்டை உலகிற்கு காட்டி நிற்பன. அவ்வாறே அரப்பா, சிந்துவெளி, மொகஞ்சதாரோ போன்ற நாகரிகங்களும் இந்திய பண்பாட்டையொட்டியவையாகும்.


விளையாட்டுக்காக வழங்கப்படும் விருதுகள்
--------------------------------------------------------
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
அர்ஜூனா விருது

தேசிய விளையாட்டு
-----------------------------------
வளைதடிப்பந்தாட்டம்

இந்திய பொருளாதாரம், மரபுவழி வேளான்மை, தற்கால வேளான்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, மென் பொருள் உற்பத்தியிலும் தங்கியுள்ளது

சனத்தொகை அதிகரிப்பு, காஷ்மீர் பிரச்சினை, ஊழல், சுற்றுப்புறச் சூழல் கேடு போன்றவை இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பாரிய சவால்களாகும்

நன்றி - தமிழ் விக்கிப்பீடியா

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!