About Me

2012/07/25

குழந்தைத் தனமான காதல்


காதல் அழகிய உணர்வு. ஈர் இதயங்கள் வாசிக்கும் உணர்வுகளின் மொழி. காதல் வயப்பட்டவர்கள் தன்னையே மறந்து மந்திரிக்கப்பட்டவர்களாய் தன் துணையின் உலகத்துக்குள் சுருண்டு விடுகின்றனர்.

இத்தகைய காதல் இன்று என்னால் குழந்தையின் செயற்பாட்டுடன் ஒப்பிடப்படுகின்றது.

1. குழந்தையின் அழகைப் போலவே காதலும் சம்பந்தப்பட்டோருக்கு ரொம்ப அழகாகத் தோன்றுகின்றது.

2. மழலை மொழி கேட்டு கிறங்காதோர் யாருளர். அவ்வாறே காதலருக்கும் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் மீது மனம் பித்தாகி  அம்மயக்கத்தில்  அலைந்து திரியும். காதலர்  தம் மொழியின் பரவசத்தில் வீழ்ந்து கிடப்பார்.

3. குழந்தை தான் விரும்பியதை அடைந்து கொள்ள பிடிவாதம் பிடிக்கும். காதலர்களும் தமது கனவை நனவாக்கிக் கொள்ள பெற்றோர், சமூகத்துடன் போராடுபவர்களாக இருக்கின்றார்கள்.

4. குழந்தைக்கு தன்னுலகமே பெரிது. காதலரும் பிறரைப் பற்றி அக்கறைப்படுவதில்லை.

5. குழந்தை தனித்திருக்க விரும்புவதில்லை. எப்பொழுதும் தன் தாயுடன் இணைந்திருக்கவே விரும்பும். காதலர்களும் ஒருவரைப் பிரிந்து ஒருவர் இருக்க விரும்புவதில்லை. எப்பொழுதும் இணைந்திருக்கவே விரும்புகின்றனர்.

6. குழந்தை அடிக்கடி எதையாவது பார்த்து சிரிக்கும். காதலர்களும் தம் ஞாபகங்களை நினைவூட்டி ரசித்து புன்னகைக்குள் உதடுகளை வீழ்த்திக் கிடப்பார்.

7. குழந்தையிடம் அதிக சுயநலம் இருக்கும். தன் பொருளை பிறர் கையாள விரும்பாது. காதலர்களும் தனது இணையை இன்னுமொருவர் ரசிப்பதை , அல்லது பழகுவதை விரும்பார்

8. குழந்தையை தாய் சுமப்பார். காதலர்களோ தமது வருங்கால கனவுகளைச் சுமப்பார்.



அடடடா.....இன்னும் இந்த ஆராய்ச்சியை தொடரலாம் தான்
இப்போதைக்கு இந்த குழந்தைத் தனம் போதும் !

-Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!