நிலா நிலா ஓடி வா


நிலாவே...........
உன்னை பல நாட்களாய்
கண்காணிக்கின்றேன்!
ஏனின்னும்...............
உன்னால் அடைகாக்க முடிவதில்லை
குஞ்சு நிலவொன்றை - என்
பிஞ்சு விழியினுள் நுழைத்திட!

சேவலின் சிறகடிப்போடு
ஒளிந்து கொள்ளும் நீ...........
பகற்பொழுதின் வறட்சியில்
மறைந்து கொள்வதும் ஏன்!

உன் பருக்கன்னங்களை
ஒற்றியெடுக்க சேலை தருகின்றேன்!
பூமியின் செல்லப்பிள்ளையே ........
நாளையென் கையசைவு கண்டு
தரையிறங்கி வா வேகமாய்
எனக்கும் சேவகம் செய்திட!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை