முதிர்கன்னி


வாழ்க்கை கலண்டரின்...........
கிழிக்கப்பட்ட பக்கங்களாய் - எம்
இளமை எடை குறைந்திருக்கும்!

ரோஜாவின் வாசத்தில்
விசுவாசங் கண்ட தேகம்
இப்போ........
முட்களின் நிழலைத் தொட்டுச் செல்லும்!

பட்ட மரங்களின் மொட்டுக்களாய்...
வெட்ட வெளிகளை மட்டும்
எட்டிப் பார்க்கும்......
வாடாத காகிதப் பூக்கள் நாங்கள் !

இப் பிரபஞ்ச மாக்களின்
விமர்சன தாக்கம் கண்டு - எம்
கண்ணாடி விம்பங்கள் கூட அழும்
இரசம் கரைந்தோட !

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை