புதிர்
உதட்டோடு உரசி நிற்கும்
முத்தங்களின் ஸ்பரிசத்தில்
உயிர் உறைந்து கிடக்கின்றது !

கனவுக்குள் பாய் விரிக்கும் - உந்தன்
நினைப்பால்......
மூச்சோரங்கள் வியர்த்துக் கிடக்கின்றது!

சூரியன் தொட்டு விட்ட- அந்த
நடு சாம புலர்வில் கூட
என் மேனி
வியர்வைக் குளியலில் உருகித் தவிக்குது!

நம்.....
சந்திப்பின் வீரியத்தில்
புது உறவொன்று அன்பால்
கனிந்து காமுறுகிறது!

காதலா ....பாசமா.....
இரண்டின் கலவையாய் புதிரொன்று
நம்முள் மோகித்துக் கிடக்குது2 comments:

  1. Anbu yentraalae athu natpukkum kaathalukum ulla melliya idaiveli thaan jancy... Nice

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை