இவர்கள்


நெருப்புத்துண்டங்களாய்
வறுமை
இவர்கள் வாழ்வை விழுங்கும்!

ஒட்டடை கூட
ஒட்டிக் கொள்ளாத உதரம்
ஆகாரத்திற்காய்
அடிக்கடி எட்டிப் பார்க்கும்!

வீதியோர நிழற்படுக்கையில் - தினம்
விழுந்து மொய்க்கும் விழிகள்
பழுதாகி துடிக்கும் கண்ணீரில்!

வீசப்படும் சோற்றுப் பருக்கைகள்
வீம்பாய் முறைத்துக் கிடக்கும்
இவர்கள்...........
தெம்பில்லா மேனிகள் கண்டு!

கள்ளிச் செடியின்........
முள்ளுறுத்தலில் முணங்கிக் கிடக்கும்
இவர்கள் வாழ்வோ.......
கேள்வியாகி முறைத்துக் கிடக்கும்!

சோகப் புழுக்களின் பிறாண்டலிலும்
சோர்வடையா பசி மிரட்டல்கள்....
வந்தமரும் சேமிப்பகங்கள்
இவர்கள் !

திட்டலும் முறைப்பும் சரிதமெழுத
விட்டகலா பசிக்காய் - தினம்
பறக்கும் பட்டாம் பூச்சிகளிவர்கள் !


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை