தனிமை!அந்த வானம் போல........
நீண்டு செல்லுமிந்த இரவில்
தேடிக் கொண்டிருக்கின்றேன் - என்
உறக்கத்தை!

தந்தையே....!

நீங்களோ .....
மீளா உறக்கத்துக்குள் நனைந்து - எமையே
மறந்து கொண்டிருக்கின்றீர்கள்!

என் வீட்டுச் சுவர்களில்
சிதறிக் கிடக்கும் உங்கள் ஞாபகங்கள்
என் குரல்வளைக்குள் இடர்வதால்
மூச்சுத் திணறி......
உயிரறுக்கின்றேன்
வெறும் ஜடமாய் நான்!

அதட்டிப் பேசும் உங்கள்
அதிர்வுகளில்லாது.............
எங்கள் மௌனங்கள் கூட
காயம் பட்டுக் கிடக்கின்றது கன காலமாய்!

சித்திரவதைக்குள் சிறைப்படும்- அந்த
கைமுஷ்டியளவு இதயத்துள்
அமிலமூட்டும் விதியைச் சபிக்கின்றேன்
உங்கள் அருகாமையை அது
நகர்த்துவதால்!

தந்தையே.....!
என் பாசத்துளிகள் ஒவ்வொன்றும்
கண்ணீராய் கரையுதிங்கே!
அதைக் காணாமல் நீங்களோ
அங்கே........
மூச்சறுந்து கிடக்கின்றீர்கள்!

2 comments:

  1. உறவுகளின் நினைவுகள் சில சமயம் உயிர் அறுத்து வேதனை கொள்ள செய்கிறது

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை