ஏக்கம்அம்மா !

என் கண்ணீர் பட்டு
இன்னும் உலராமல்தான் இருக்கின்றீர்கள்
அந்த வார்த்தையில் !

என் ......
மன டயறியைப் புரட்டுகின்றேன்
நீங்கள்..........
விட்டுச் சென்ற பக்கங்கள்
இன்னும் புரட்டப்படாமல்தான் இருக்கின்றது!

எத்தனை யுகம் கடந்தாலும்
உங்கள் வெற்றிடம் நிரப்பப்படாமலே
நான் வேரூன்றிக் கிடப்பேன்.....
வெறுமை பூமிக்குள்!

வாருங்கள்.........
நமக்குள் மறு ஜென்மம் ஏதுமில்லை!
இருந்திருந்தால்..........
பிறந்திடுவேன் உங்கள் மூச்சுக்காற்றாய்
மறுபடியும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை