போராளி !


நானும் போராளியே!
சயனைட் தேடுகின்றேன்
என்னுயிர் அறுக்கவல்ல.........
அக்கிரமங்களால் தீ வார்க்கும்- அந்தக்
கயவர்களைக் கருக்கிடவே!

நேசத்தை வார்க்கும் நெஞ்சில்
நெருஞ்சியைப் பதியமிடுவர் வஞ்சகர்!
கேடியாய் பிறர் கோடி பிடுங்கி
நாடியுமறுப்பர் உயிர் வதைக்க !

ஓர் குற்றம் செய்யவில்லை
பாச உடன்படிக்கை மீறவில்லை
வார்த்தைக் கணை தொடுக்கவில்லை
இருந்தும்...........
அவலச் சிறைக்குள் அடைக்கின்றனர்
குற்றவாளியென சிதைக்கின்றனர்!

இடியோசைகளின் பயிற்சிக் களம்
என் மனமாம்........
மேகங்களின் தேரோட்டம் என் விழியாம்.....
அஞ்சாத சமுத்திரம் என் வாழ்வாம்......
சூரியப் புயல் என் சொல்லாம்..............
பிரகடனம் செய்கின்றேனென்னை
எதிராளி எட்டடி தள்ளி நிற்க!

மண்ணிலென் இருப்பறுக்க
பண்பற்றோர் வேரறுக்கையில்.........
புயலாக மாறும் பூவையென்னின்- ரவைகள்
ரகஸியமாய் வெளிநடப்புச் செய்கின்றன
தாமும் தற்கொலைப் போராளியென!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை