காதலும் அவஸ்தையும் !


காதலித்துப் பார்............!

உன் போனில் சார்ஜ் குறையும்
ரீலோட் பண்ணிப் பண்ணியே
மணிபர்ஸ் எடை குறையும்!
காதலித்துப் பார் !

காதலித்துப்பார்..........
புவிக்கும் விண்ணுக்குமிடையில்
சிறகின்றியே - அடிக்கடி நீ
பறப்பாய் அந்தரத்தில் !

உன்னவள் விரல் நிறைக்கவே
உன் சுண்டு விரல் மோதிரம் கூட
பறக்கும் அடகுக் கடைக்குள்!
அடிக்கடி ..........காதலித்துப் பார்!

நீ சொல்லும் பொய்களெல்லாம்- உன்
இருதயத்துள் இறங்கும் பீரங்கியாய்!
பிள்ளை மட்டுமல்ல புல்லுக்கூடக்
காறித்துப்பும்................
காதலித்துப்பார்!

அவளுக்காய் நீ பிடிக்கும் காக்காக்கள்........
 தெருவோரமெங்கும் உன்னை மிரட்டும்!
உன் வருமானம் இறங்குமுகமாகும்
காதலித்துப்பார்!

பெண் தேவதைகளுக்காக புன்னகைக்கும்
உன் உதடுகள் சீல் வைக்கப்படும்!
பிறரை ரசிக்கும் உன் பார்வைகளால்
உன் கண் விழி கூட நோண்டப்படும் ............
காதலித்துப்பார்..........!

உன் வார்த்தைக் கெல்லாம் அகராதி
தேடுவாள்- உன்
அன்பின் எடை குறைந்தாலோ
அட்டகாஷமாய் முறைத்துச் சிணுங்குவாள்.....
காதலித்துப் பார்!

ஆண்களே.............!
காதல் தேசம் அழகானது!!
அவஸ்தையானது !!!
அந்த அன்பின் அழகுக்குள்
தொலைந்து போகும் வாழ்வில்
மறப்பீர்கள் உம்மை.......

 காதலித்துப் பாரும் !
கனவுலக அழகில் வீழ்ந்து கிடக்க!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை