தாய்மை


கருக் கொண்டாள் என் அன்னை
யார் உருவில் நான் - இருந்தும்
இருட்டறைக்குள் என்னிருப்பு
உறுதிப்படுத்தப்படுகிறது மகிழ்வோடு!

எட்டிப் பார்க்கும் ஒவ்வொரு நிலாவிலும்
அன்னையவள் ஒதுங்கிக் கொள்கின்றாள்
'கிளினிக்' வாசலில்!

அவள் எடை கூடலில்
பூரிக்கின்ற உறவுகள்............
விழி திறந்தே காத்துக் கிடக்கின்றனர்
என் வரவுக்காய் பல மாதங்களாய்!

காற்றில் பரபரக்கும் நாட்காட்டி
காதலோடு ஸ்பரிக்கும் அவர் விரலை,,,,,,,,,,
மோதியெழும் தலைச்சுற்றலும் வாந்தியும்
சுருதி சேர்க்கும் தாய்மைக்குள்!

எட்டி நானும் உதைக்கையில்
சினமின்றி பதைத்திடும் தொப்புள் நாண்.......
ரசிக்கும் ரகஸியமாய் என்னதிர்வை
நெஞ்சில் வண்ணக் கனா புதைத்தே!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை