காதலித்துப் பார்


காதலித்துப் பார்.......
முட்களில் படுத்தாலும்
ரோஜாவுன் மடியாகும்!

கண்ணாடியில் உன் விம்பங்கள்
அடிக்கடி அழகு பெறும்!
விழிகள் காதலில் கசிந்து
இதய மொழிகள் புன்னகையில் வடியும்
காதலித்துப் பார்!

உனக்கு அவள்.......
அவளுக்கு நீ...........
சரித்திரங்களில் உங்கள் பெயர்கள்
பொறிக்கப்படும்!
உயிரோ கனவின் தித்திப்பில்
மயங்கிக் கிடக்கும்
காதலித்துப்பார்!

நண்பர்கள் அந்நியமாவார்கள்
அந்நியமான அவளோ அன்பாவாள்!
மௌனங்கள் மனசைக் கிள்ளும்
மனசோ காதலில் நனையும்
காதலித்துப் பார்!

2 comments:

 1. //உனக்கு அவள்.......
  அவளுக்கு நீ...........
  சரித்திரங்களில் உங்கள் பெயர்கள்
  பொறிக்கப்படும்!
  உயிரோ கனவின் தித்திப்பில்
  மயங்கிக் கிடக்கும்
  காதலித்துப்பார்!
  // சரித்திரத்தில் இடம்பெற்ற காதல் எல்லாம் உணர்வுகளால் வேண்டுமானால் ஒன்றாகி இருக்கலாம், ஆனால் குடும்ப வாழ்க்கையில் கேள்வி குறிதானே ஜான்சி.....

  //நண்பர்கள் அந்நியமாவார்கள்
  அந்நியமான அவளோ அன்பாவாள்!// ஹஹா இது நூற்றுக்கு நூறு உண்மை

  ReplyDelete
 2. உண்மைதான் உதயா....கனவிலும் கற்பனையிலும் இனிக்கின்ற காதல் யதார்த்தத்தில் பொய்த்துப் போகின்றது பெரும்பாலும்....காதலில் வலிமையானது அந்த வலிதான்.......பின்னூட்டத்திற்கு நன்றி !

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை