உறக்கம்விழிக்கும் விடுமுறை தா..!


உறக்கத்தின் போராட்டம்
களமிறங்கும் நேரமிது!

இருளும் முகங்காட்ட...
மெல்ல எட்டிப் பார்க்கிறது
கனாக்களும்!
எம் நினைவகத்தின் இருப்புக்களை
மீள உருத்துலக்குவதற்காக!

விளக்கின் ஒளிச்சாரலில்
விழத்துடிக்காத பார்வைகள்....
வீம்பாய் முரசறைகின்றது
கொட்டாவி அலைகளோடு!

குட் நைட்.......!
இஷ்டப்பட்ட வார்த்தைகளோடு
நாவும் குவிந்து மடிகின்றது
இன்றைய பொழுதின் நன்றியுரையாய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை