மலரே !


மலரே.........!

உன் தனிமைக்குள் விரல் நீட்டும் என்னோடு
சினக்காதே!
இன்ப வாசிப்புக்களை நானும் நுகர்ந்திட
வந்தேன் மெல்ல..........
உன்னருகில்!

வா...மலரே!
இயற்கை தூரிகை வரையும்
ஓவியத்துள்.........நாமும் 
வண்ணங்களாகக் கிறங்கிக் கிடக்கலாம்
மகிழ்வாக!

வா... வா !
உன் நறுமணத்தை வடித்தெத்தே......
நிரப்பிடலாம் என் எண்ணத்துள்!
என் முத்தங்களின் இதழ்களால்
ஒற்றிடலாம் உன் அமுதத்தை!

வா.....வா !
தென்றலை பிழிந்தெடுத்தே............
நனைக்கலாம் உன் மென்னிதழ்களை
மெதுவாக நாள்தோறும்!

ரம்மியங்களை என்னுள் செதுக்கவே...
வந்தேன் மெதுவாய் நானும் உன்னருகே......
வா வா மென் மலரே என்னருகே!
வசந்த நீரோட்டத்தில் நாமும் இணைந்திடவே!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை