நண்பனே !தொலைவில் சிறு புள்ளியாய்
சூரியன்.............
அதன் வெம்மைக்குள் சிறைப்படும்
என் வியர்வைத்துளிகள் - உன்
பார்வையில் ஆவியாகிப் போகின்றது!

நிமிஷங்களின் சில்மிஷத்தால் - நம்
உதடுகள் மௌனித்தாலும்........
உணர்வுகளின் பாஷையில் - நம்
இதயம் உறைந்துதான் கிடக்கின்றது!

உன்னாசைகளில் நானும்
என்னாசைகளில் நீயும் - நம்மை
பகிர்ந்து கொள்கையில்........
உயிரின் உயிலில்- நம்
நட்பும் கைரேகை பதிக்கின்றது
ஆனந்தமாய்!

நம் பார்வைப் புலத்தில் பதிக்கப்படுகின்ற
நம் விம்பங்கள்.....
நம் மனவெளியை ஆக்கிரமிக்கையில்
சிலிர்த்துக் கிடக்கின்றோம் - நாம்
கவலைகளை விற்றவர்களாய்!

நம் நட்பின் இதத்தில்
பனித்துளிகளின் சாம்ராஜ்யமாய்..
முழு மனசுமே அப்பிக்கிடக்கிறது !

நாமோ.........!
புன்னகைகளை மட்டுமே சேகரித்தபடி
நட்புலகில் அலைகின்றோம்.........
சுதந்திரமாய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை