என்னால் முடியும் !

என்
மனத் தரை வேரூன்றலில்
தழுவிக் கிடக்கிறது
முயற்சி விழுதுகள்!

சூரிய வெம்மையின்
இம்சை அராஜகத்திலும்
துவண்டிடா மேனி..........
தடம் பதிக்கத் துடிக்கின்றது
உழைப்பின் நல்லறுவடைக்காய்!

துரோக முட்களால்
குரல்வளை நசிப்போரின்
துவம்சத்திலும்.....என் வாழ்வு
தளிர் விட துடிக்கும் !

என்னால் முடியும்......
தன்னம்பிக்கையின் விசிறலுக்குள்
தடையின்றி நனைந்தே தான்
வாழ்வைச் செதுக்க முடியும்
வனப்பில் நனைந்தே - என்றும்
வானம் தொடவும் முடியும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை