தன்னம்பிக்கை


என் ..................
நிழலில் விசிறப்படும்
நெருப்புத்துண்டங்களிலும்
சுவடு பதிப்பேன் சுதந்திரமாய்

என்.................
சறுக்கலின் ஒவ்வொரு நகர்வும்
படிகளாய் மாறும்.........
முன்னேற்ற முகடுகளில்
முத்திரை பதிக்க!

என்...................
கண்ணாடி மனசுக்குள்
கல்லெறிவோர்
புல்லரித்துக் கிடப்பார் - என்
வெற்றி முகம் கண்டு!

என்............
முயற்சி வேர்களின்
மூச்சுக் காற்றில் விசம் தடவுவோர்
மூச்சிறைத்து கிடப்பாரென்
வளர்ச்சி கண்டு!

தன்னம்பிக்கை.................
பல தடைகளைத் தகர்த்தெறிய
வெற்றியின் அறைகூவலுக்குள்
சங்கமித்துக் கிடப்பேன்
என்னாளும்!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை