வலியோடு மோதும் கண்ணீரின் ஓலம்/
கலி யறியா நெஞ்சிலே பாயும்/
ஒலிக்காதோ அப்பாவின் காந்தக் குரலினி/
பலியெடுத்த மரணமே கூறாயோ நீ/
செல்லுமென் நிழலுக்குள் நிதம் ஒளியாகி/
வல்லமையும் தன்னம்பிக்கையும் கற்க முதலாகி/
இல்லற வாழ்வோடிணைந்த அம்மாவும் தவிப்பாக/
சொல்லாமல் சென்றதும் ஏனோ சொல்லப்பா/
குடும்பமென்ற கூட்டின் இனிய உயிர்ப்பாம்/
தடுக்கி வீழ்ந்திடாமல் அணைத்திடும் தவிப்பாம்/
இடுக்கண் அண்டாமல் அரணாகும் காப்பாய்/
மடுவானேன் மலையைச் சிதைத்ததும் யாரோ/
கருவாகி தலைமகளாய்ப் பூத்த என்னுள்/
குருவாகி அறிவுதனைப் பிசைந்தூட்டி மகிழ்ந்தே/
தருவாகி சிந்தைக்குள் வெம்மையும் பிழிந்த/
அருமைத் தந்தையே காண்பேனோ நானே/
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!