தளிர்த்திடும் ஒற்றுமையும் தங்கக் கரங்களால்
தன்னார்வக் கூட்டணியில் மனமும் இணைந்தால்
தரணியும் துலங்கிடுமே தன்னிகரில்லா உழைப்பினாலே
தேடிடுவார் வளங்களை தேயாதே இயற்கையுமே
தேன்சுவை மொழியெடுத்தால் வளர்த்திடலாம் சிந்தையை
தேகத்தின் வலிமையினால் உழைப்பும் செல்வமே
தேக ஆரோக்கியம் என்றும் அடையாளமாம்
ஒன்றுபட்டே வெல்லலாம் மனங்களை அன்பினாலே
ஓங்கிடும் பலத்தினில் ஒளியேற்றலாம் மனையினில்
ஒருமித்த கருத்தெடுத்தே களைந்திடலாம் முரண்பாடுகளும்
ஒத்திசையும் குணத்தாலே ஆளலாம் எத்திசையும்
கூடியே அகற்றலாம் பேதங்களும் ஒழிய
கூடாதோர் நட்பையும் வீழ்த்திடலாம் வெளியே
கூட்டணியாய் திரண்டேதான் காட்டிடலாம் பலத்தை
கூடிடலாம் திருநாளில் பண்பாடும் வளர
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!