1
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
தமக்கியல்பாக தனைமாற்றும் உயர் அதிகாரம்/
தடுமாறித் தளம்பும் உளத்திற்கான அங்கீகாரம்/
தம்நிலை உணர்ந்திடல் சிறப்பே உடனிருப்போருக்கு/
தமைக்காத்து வாழ்தலே வாழ்வுக்கும் சிறப்பு/
தீயினில் குளிர்காய்தல்போல மிகஅகலாதும் அணுகாதும்/
திருத்திட வேண்டும் தம் நடத்தைகளை/
மிகை நெருக்கமது புலப்படுத்தும் பலகீனங்களை/
விலகியிருத்தலும் பெற்றுத்தரா உயர் நன்மைகளை/
பக்குவமாகப் பழகும் பண்பதனைப் பெற்றோரே
பணியிடங்களில் வெற்றிகளைக் குவிக்கின்றார் உவந்தே/
தாயும் ஆனவன்
தள்ளாடும் மேனியைத் தாங்கிடும் தூணாய்/
தாய்க்கே நிழலாகும் தனயனின் அன்பில்/
சுவர்க்கமும் உயிர்க்குமே சுந்தர பூமிக்குள்/
சுமை வாழ்வுக்குள் சுகமும் பரவுமே/
முதுமைக்குள் மூழ்கையில் துணையின் வாசமே/
முகவரியாகும் தள்ளாடும் மேனிக்கும் சுவாசமாக/
நோயுற்ற போதெல்லாம் நோவுற்றே காத்திட்ட/
ஈன்றவளின் நிழலெனவே படர்கின்ற பிள்ளையே/
சேயாகத் துளிர்த்திடும் அன்னையைக் காத்திடும்/
தாயும் ஆனவனைத் தரணியும் போற்றுமே/
வாலிபமும் வயோதிகமும்
வயதெனும் எண்ணுக்குள் வசப்படுவதில்லை மனதும்/
வழிகின்ற உணர்வுகளால் பக்குவப்படுகின்றதே வாழ்வும்/
வாலிபமும் வயோதிகமும் பருவத்தின் சுழற்சியே/
முதுமைக்குள் முடங்கிடாத இளமை நினைவுகளை/
இரசித்திடும் விழிகளுக்கு திரையிடுமோ காலமும்/
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!