புகைவண்டி தரும் சிந்தனை


புகைவண்டியில் பயணிக்கும் போதெல்லாம் எனக்குள் எழும் சிந்தனையிவை
-----------------------------------------------------------
நாம் அனுபவங்கள் வாயிலாக வே அனேகமானவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். பாடசாலைக் காலத்தை விட , ஏனைய வயதுகளில் கற்றுக் கொள்ளும் விடயங்கள் தான் அதிகம். ஒவ்வொரு காட்சிகளும் , சம்பவங்களும் நமக்குள்  புதுப்புது விடயங்களைக் கற்றுத் தருகின்றது..அந்த வகையில் புகைவண்டிப் பயணங்களின் போது  நான் கற்றுக்கொண்டவை,,,

*  புகைவண்டியை எதிர்பார்த்து ஒரு குறித்த இடத்திலிருந்தே தரித்து பயணித்தல்.- நமக்குள்ளும் வாழ்க்கை தொடர்பான இலக்குகள் இருத்தல் வேண்டும்.

* ஒரு குறித்த நேரத்தில் பயணித்தல் - ஒவ்வொரு செயல்களையும் நாம் குறித்த நேரத்திலேயே செய்தல் வேண்டும்.

* பல பெட்டிகள் இணைக்கப்பட்டிருத்தல்- பிறருடன் எப்போதும் நாம் ஒற்றுமையுடன் செயலாற்றி வாழ்வை நகர்த்துதல் வேண்டும்.

* ரயில் ஸ்நேகம் - அவ்வவ்போது மனதை அரிக்கும் பிரச்சினைகளையும், துன்பங்களையும் உடனுக்குடன் நீக்குதல்.

* ஓர் பெட்டியில் பலரிருத்தல்- பலருடன் நட்புமுகம் பேணல்

*  வேகமாகப் பயணித்தல் - செய்யத்தொடங்கும் வேலைகளையும், கருமங்களையும் விரைவாக நேர்த்தியாகச் செய்தல்.

* நிலையக் கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல்_ பிறரின் நல்ல அறிவுரைகளுக்கு கட்டுப்படுதல்.

* ஓர் குறித்த பாதை வழியே இயங்குதல் - ஒவ்வொரு வேலைகளையும் திட்டமிட்டே செய்தல்.

* அதன் பயணப்பாதையின் அருகாமையில் யாரும் நிற்காமை- கெட்ட விடயங்களை நம் வாழ்விலிருந்து நீக்குதல்.

* அது வீதியை குறுக்கிடும் போது ஏனைய வாகனங்கள் வழிவிட்டுக் காத்திருத்தல் - பிறருடன் புரிந்துணர்வுடன் பேணி செயல்கள் நிறைவேற ஒத்துழைத்தல்.

* அபாயச்சங்கிலி காணப்படல் - எப்பொழுதும் விழிப்புடனிருத்தல்.

* அதன் வருகையை அயல் வாசிகளுக்குணர்த்தல்- நமது நல்ல செயல்கள் பற்றி அடுத்தவருக்கு அறியச் செய்தல்.

ம்ம்......என் சிந்தனை உங்களுக்குப் பிடித்திருக்கா....இன்னும் சிந்திப்போம்


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை