கானல் நீருக்குள் நாம்
காகித ஓடமிட்டோம்
மணல் மேட்டில்
சிற்பங்கள் வார்த்தோம்!
ஆலமர நிழலில்
ஆசையாய் தீ வார்த்தோம் !
மூங்கில் தடி நாட்டி
புவியைத் தாங்கிக் கொண்டோம்!
கடலலை சேமித்தே
இருதயத் துடிப்பில் வேலி கோர்த்தோம்
தென்றலை உறிஞ்சியெடுத்து
சுரங்கத்தில் தாழிட்டோம்!
சூரிய கால்களில்
சூனியம் கட்டி விட்டோம் !
கடிகார நகர்வினையும்
கடிந்தே நிறுத்தி வைத்தோம்!
குயிலின் குரலுடைத்து
வெயிலிலுக்குள் உலா்த்தி விட்டோம்
வானவில்லை வளைத்தெடுத்தே
கானகத்துள் வில்லொடித்தோம்!
தீ சுருட்டியெடுத்து
நம் வார்த்தைக்குள் கோர்த்தெடுத்தோம்
அழகை அழ வைத்து
அவலத்துள் விரட்டி விட்டோம்!
முரண்பாட்டை முன்னுரையாய்
தலைப்பிட்டோம் நம்முறவுக்குள்!
உரமிட்டோம் பிரிவை நம்முள்
இனி எதிர்வாதங்களே நம்முறவாய்!
வானவில்லை வளைத்தெடுத்தே
ReplyDeleteகானகத்துள் வில்லொடித்தோம்!
இனி எதிர்வாதங்களே நம்முறவாய்!...........நல்ல கவிதை....
நன்றி
Delete