******
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகிறான்"
(அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, புகாரி)
******
உண்ணுங்கள் , பருகுங்கள் , விரயம் செய்யாதீர் " (7:31)
******
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
"மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை. இறைவன் சொல்கிறான் நோன்பைத் தவிர, ஏனெனில் நிச்சயமாக எனக்குரியது. நானே அதற்கு கூலி வழங்குகிறேன். காரணம் அடியான் தனது ஆசையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகிறான் " (முஸ்லிம்)
******
நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன"
- நபி மொழி_
(அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, திர்மிதி - 619 )
******
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
"அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது "
( அறிவிப்பவர் - அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, நூற்கள் : அஹ்மது , நஸயீ, பைஹக்கீ )
******
ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன"
- நபிமொழி-
( அறிவிப்பவர் - அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ ,
நூல் :முஸ்லிம் 1957)
******
"வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்)
கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்.
(திருக்குர்ஆன் 2:187)
******
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் ( நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம் மாதம் நோன்பு நோற்க வேண்டும் .
(அல்குர் ஆன் 2 :185)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!