அன்பு வந்தது


அன்பு கொள்ளுவதும் , அன்பால் ஆட்படுவதும் இவ்வுலகில் பணம் கொடுத்து வாங்க முடியாத இனிமையான உணர்வு. பிறரின் நல்ல குணங்களால் ஈர்க்கப்பட்டு மானசீகமாய் நட்புக்குள் , அன்புக்குள் நாம், நம்மை வீழ்த்தும் போது சந்தோஷம் சங்கீதம் பாடும்.

நாம் பிறரை நேசிக்கும் ஒவ்வொரு கணங்களும் நாமும் அவர்களால் நேசிக்கப்படுவோம். நேசிக்கப்படுகின்றோம். குடும்பம் , நட்பு, உறவுகள், காதல் என விரியும் இவ்வன்பின் எல்லை முடிவிலியே! அன்பின் சுகந்தத்தில் வசந்தங்கள் நம்மோடு ஒட்டியுறவாடும்.

அன்பான வார்த்தைகளுக்கு அடிபணிதல் கூட ஆனந்த மயக்கமே! மனித இயக்கம் மட்டுமல்ல, இவ்வுலகின் நகர்வு கூட அன்பின் ஆதிக்கத்திலேயே அழகு மொழி பேசுகின்றது.

நம்மை நாம் அன்பு கொள்ளும் போதுதான் பிறரையும் நாம் நேசிக்கத் தூண்டப்படுகின்றோம். அன்பின் வலிமை அதிகம். அன்பால் எதையும் சாதிக்கலாம். அந்தச் சாதனையின் வெற்றிக் களிப்பில் சோகங்களையும் விரட்டப்படலாம்.

"நேசிப்போம்...........!
நேசிக்கப்படுவோம் !! "
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை