About Me

2013/04/10

துளிகள் - 1



இறப்பு, பிறப்பு எனும் ஈர் எல்லைகளுக்கிடையிலான மானுடவியலின் பருவங்களை மகாகவி பாரதியார் தனது பாடல்கள் மூலம் அழகாகத் தொட்டுக் காட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று ஊஞ்சட் பாடல்....

பதினான்கு வயதுச் சிறுவன் பாரதி. அவரை மணமுடித்த மணமகள் செல்லம்மாளோ ஏழுவயதுச் சிறுமி. அதி விமரிசையாய் எட்டயபுரத்தில் நிகழ்ந்தது திருமணம். 

திருமணத்தின் நான்காம் நாள். 

பலரும் கண்டு அதிசயிக்க, திருமண ஊர்வலம் முடிந்து, ஊஞ்சல் நிகழ்ச்சி நிகழ்கிறது. அதுபோது, மணமகன் - அதாவது பாரதியார் இனிய ராகத்தில் ஓர் ஊஞ்சல் பாடலைப் பாடுகிறார். ஊரே வியக்க நடந்த அந்த அதிசய நிகழ்வை நினைவுறுத்தி மணப் பெண்ணான செல்லம்மா பாரதி பின்னொரு காலத்தில் தமது "பாரதியார் சரித்திரத்தில்' எழுதுகிறார் இவ்வாறு,

கல்யாண விமரிசையைப் புகழ்ந்து, அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும், என் தகப்பனார் கல்யாணத்துக்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து, வித்துவான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாடல் அது. அதைக் கேட்டு, யாவரும், 

பலே! பேஷ்! 

என்று ஆரவாரித்து, மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்த்ததுபோல், வாய்க்க வேண்டும். மணிப்பயல், சிங்கக்குட்டி என்றெல்லாம் அவரவர் போக்கின்படி புகழ்ந்தார்கள். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம்பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார்''.

என செல்லம்மாள் தன் நினைவுகளில் உள்ளம் பூத்தார்.
------------------------------------------------------------------------------------------


எதிரியின் புன்னகையை விட,
நண்பரின் கோபம் சிறந்தது.
------------------------------------------------------------------------------------------


நம்மை படிப்பதை விட, பிறரின் உணர்வுகளை நாம் முதலில் புரிந்து கொள்வோமானால், வாழ்க்கை நமக்கு சவாலாக இருக்காது........

--------------------------------------------------------------------------------------



வலிக்கின்ற போராட்டங்களுக்கு
விலையேது.........
ஒவ்வொரு அழிவுகளுமே..............
அடைகாத்து நிற்கும் விடுதலையை!

---------------------------------------------------------------------------------------------



தவறு ஏற்படாதவாறு நடப்பவர் புத்திசாலி.......
செய்த தவறை ஒப்புக் கொண்டவர் தைரியசாலி.....
தவறுக்காக வருந்துபவர் பண்பாளர்!

-----------------------------------------------------------------------------------------



வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு எழுதித் தந்த அழகான புத்தகம். நமது வாழ்வை தீர்மானிப்பவர்கள் நாமே தவிர பிறரல்ல...........

எப்பொழுது நம் வாழ்வில் திருப்தியடையாமல், அடுத்தவரை திரும்பிப் பார்த்து ஏக்கங் கொள்ள ஆரம்பிக்கின்றோமோ.............அன்றே நம் வாழ்வின் நிம்மதி நம்மை விட்டுச் செல்ல ஆரம்பிக்கின்றது.
----------------------------------------------------------------------------------------


பயம் எனும் வேரிலிருந்து முளைவிடும் உணர்வுதான் கவலை....
கவலையை சகித்து பழகிக் கொள்பவருக்கு, வாழ்க்கையே ஓர் கலையாக மாறி விடும்...
------------------------------------------------------------------------------------------

நம் உதடுகள் ஒரு விடயத்தை மறுக்க ஆரம்பிக்கும் போதே, உள்ளம் ஏனோ அதனை இரகஸியமாக விரும்ப ஆரம்பிக்கின்றது.
கோபம் தணிந்த பின்னர், அந்த வெறுப்பிற்காக மனம் வெதும்பும். ஆனால் அதனை நாம் வெளிப்படுத்தாமல் "கல்" மனமாய் காட்டிக் கொள்வோம்!
-----------------------------------------------------------------------------------------



முதல் பார்வை........
முதல் வார்த்தை.........
முதல் முத்தம்.........
முதல் ஸ்பரிசம்.........
முதல் சந்திப்பு..........
முதல் காதல்.........

இவையெல்லாம்  மகிழ்விற்காக மனதில் சேமிக்கப்பட்டிருக்கும் "முதல்"கள்
---------------------------------------------------------------------------------------

அதிகம் வம்பிழுக்கும் நண்பனை விட
ஆபத்தில் நமக்கு தெம்பளிக்கும் நண்பனே சிறந்தவன்!

நல்ல நண்பர்களை தெரிவு செய்து பழகுவது, நிம்மதியான வாழ்வுக்கான உத்தரவாதம்!
----------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு தடவைகளும் முயற்சிக்கும் போது கீழே விழுகின்றேன். எழ முயற்சிக்கையில் மூன்றாம் கையாய் தன்னம்பிக்கை!
----------------------------------------------------------------------------------------



அதிகம் பேசுவது ஆணா........பெண்ணா!
-----------------------------------------------------------
பாக்ஸ்பி2  (Foxp2)  என்னும் புரதம் பெண்களின் மூளையில் அதிகம் காணப்படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர். சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 13000 வார்த்தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.















No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!