மாற்றமின்றி
ஆனால்
இரசப் பூச்சில் என் விம்பம் மட்டும்
வாலிப இழப்பை பறைசாட்டிக் கொண்டிருக்கும்
கார் குழலாய் எழில் முடித்த நீள்கூந்தலில்
குதர்க்கம் செய்து கொண்டிருக்கும்
நரைகள்!
மினுங்கும் வாலிபத்தின் ரேகையாய்
சுருக்கங்கள் கோடுகள் கிழித்திருக்கும்
மூக்குக் கண்ணாடியின் கைத்தாங்கலில்
கன்னக் குழிகள்
விகாரமாய் சிரித்துக் கொண்டிருக்கும்!
பட்டாம் பூச்சியாய் பறக்கும் விழிகள்
சிறகுடைத்து
கண்ணீர் கூட்டுக்குள்
கதவடைத்துக் கொள்ளும்!
வாலிபம் காலியாகும் தேகமதில்
வலிகளின் ஆக்கிரமிப்புக்கள்
எல்லைகளாய் வழி மறித்துக் கொண்டிருக்கும்...
பற்றுப் பாசங்களுடன்
சுற்றியிருந்த கூட்டங்களெல்லாம்
காணாமல் போவதால்
தனிமை வரத்தினுள் வாழ்க்கை
அலைந்து கொண்டிருக்கும்!
காலத் தீர்ப்பில் வாலிபம் தொலைந்து
இயலாமை எனதாகும் போது
"கிழம்" என வாலிபங்கள் பரிகசிப்பார்
நாளை தம் வாழ்வறியாமலே!
அப்பொழுதும்
நான் நானாகத்தான்
கண்ணாடி மட்டும்
உருவை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும்!
- Jancy Caffoor-
09.04.2013
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!