About Me

2013/04/10

துளிகள் 2



அழகான சிரிப்பும்..........
அன்பான மனமும்........

எல்லா மனங்களையும் வசீகரிக்கக் கூடியவைதான்!
அன்பு அனைத்தையும் வென்று விடும்...
----------------------------------------------------------------------------------
உன் இதழில்...........!

முத்தங்களை இலவச இணைப்புச் செய்கின்றேன்.....
வாழ்க்கைச் சந்தா மட்டும் தந்து விடு!
-------------------------------------------------------------------------------------


வார்த்தைகள்தான் நம் நம்பிக்கையின் கதவு!

ஒருவரை முழுமையாக நம்பி ஏமாறும் போது கலங்கி நிற்பது மனது மட்டுமல்ல, வாழ்க்கையும் தான்!
---------------------------------------------------------------------------------------


நம் நிழல் கூட ஒருபோதும் அதன் நீளத்தில் நம்முடன் ஒத்திருக்காத போதும் , உணர்வுகளால் ஒத்திருக்கும் நம் நண்பர்கள் நம்மை பிறரிடம் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். நல்ல நண்பன் வெறும் உறவல்ல வாழ்க்கை...............!

-----------------------------------------------------------------------------------------




தான் விரும்பும் பொருளைக் கேட்டு பிடிவாதமாய் அடம்பிடித்து அடிவாங்கும் குழந்தை.....................
தாய் அடித்த வலி நீங்க முன்னர் "அம்மா" ன்னு
தாவி அன்னை அரவணைப்பில் அடங்கிக் கொள்வாள்!

"குழந்தையின் அன்பு............
வற்றாத நீரூற்று"

I Miss u da chellam...........

----------------------------------------------------------------------------------------


ஒவ்வொரு வெற்றியாளரும் வாய்ப்புக்களை தன் வசப்படுத்தியே வாழும் காலத்திற்குள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

வாய்ப்புக்கள்................!

வாழ்க்கைக்காக இறைவன் நமக்களிக்கும் பரிசு!!!

பயன்படுத்துவது நம் புத்தாலித்தனத்திலேயே தங்கியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------

ஆசை என்பது மனதிலிருந்து பீறிடும் உணர்வுகளில் ஒன்று ........
அதனைக் கடிவாளமிட்டு அடக்கலாமே தவிர அழிக்க முடியாது. ஏனென்றால் மனதின் பசியாக பிராவிக்கும் இவ் ஆசையின் விளைவுகள் பிறரைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

ஆனால் அனுபவங்களை மனம் கற்றுக் கொண்ட பின்னர், ஆசைகள் தானாய் தன்னை சுதாகரித்துக் கொள்ளும்!
---------------------------------------------------------------------------------------


சாதிக்கும் மனமிருந்தால் போதும்............
சாதனைகள் ஊனம் தாண்டி உலகம் தொடும்!
----------------------------------------------------------------------------------------



மதங்கள் பேச ஆரம்பிக்கும் போது
மனிதம் மௌனமாகி விடும்!

மௌனத்தின் ஹிம்சையில்
மரணங்கள் மயானம் தொழும்!






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!