இறந்தாலும் மரிக்காதகருவறை கற்றுத் தந்த அன்பு
மனவறையை தனதாக்கிக் கொண்டது!

கனவறையும் காதலாகிக் கசிந்ததில்
மணவறையையும் நல்லறமாகி நின்றது!

நிலாவரை தொட்டு நின்ற காதல்
கல்லறைக்குள் துயிலாமல் வந்தது!

காலவரை யேதிங்கே............!
கள்ளமில்லா உண்மைக் காதலுக்கே!

இறந்தாலும்................
புதிதாய்ப் பிறக்கும் உண்மைக் காதலிது!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை