சில்லென்றுபனித் துளியின் தழுவலில்
இயற்கை நீராடிக் கொண்டிருக்கும்
அழகாய்!

காற்று கோர்த்துச் செல்லும்
சுவாசத்தின் சகபாடியாய்
உன்னை விட்டுச் செல்கின்றாய்
என்னில்!

நம் பேச்சுக்களின் சிந்தலில்
சிலிர்க்கும் சலங்கைகள்
குந்திக் கொள்ளும் காலடியில்!

உந்தன் காதல் சல்லாபத்தில்
மெட்டிசைக்கும் மெட்டியாய்......
அடிக்கடி கிள்ளும் உன் நினைவுகள்!

நீ எனை விட்டுச் செல்லும்
ஒவ்வொரு தருணங்களும் ............

யுகங்களாய் சரித்திரம் பேசும்
என் தனிமையே துணையாய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை