நாள் குறி
மெல்லன கவிழ்ந்தன விழிகள்
வண்டாய் நீயோ சுவைக்கையில்...........

ஹிருதயம் சிறகு முளைத்து பறந்ததுன்
பருவத் தோட்டத்தில் எனைத் தேடித் தேடி!

உன் கிறுக்கல்களையெல்லாம் கவிகளாக்கி
நான் சுவைக்கையில்.........
தமிழ் இலக்கணமே குடி கொண்டன
நம் நேசிப்புக்குள்!

கொஞ்சம் பொறு.......!

மெல்லப் புறாக்களை உன்னிடம்
தூதனுப்புகின்றேன்.......
உன் உள்ளடக் கிடங்கினுள்
பதுங்கிக் கிடக்கும் என்னை ......
உன் வசப்படுத்தும் நாள் குறிக்க!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை