வரும் வரை

காத்திருக்கின்றேன் இன்னும்
இருள் கடந்து சென்ற பின்னர் - நீ
இறங்கி வருவாய் என்று!

நிலவுக்காய் நீ...........
உன்னை விட்டுக் கொடுக்கலாம்.....
தவிப்பது நான்தானே!

ஆயிரம் அரவணைப்புக்கள்
மடி சேரலாம்... இருந்தும்
என் உச்சம் தலை வருடும்
தாய்மையாய் நீ!

என்னுள் விட்டுச் சென்ற - உன்
கனவுகளுக்காகவேனும்........
நான் வாழ்ந்தாக வேண்டும்
நீ வரும் வரை!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை