சுகமான காதலும் சுமைகளும்...ஆகாயம் குடை பிடிக்க
அழகாய் ஒரு பயணம்
நிலாவின் நெஞ்சத் தரையில்!

சில்லென்ற காற்றில் .....
உன் குறும்புகள் தைத்து
நேசப் பயணம் உன் மனவெளியில்!

இராக்கள் கூட பசுமை சிந்தும்
நீ அருகினில் நின்றால்...........
தீ கூட குளிரேந்தும்
உன் அன்பினைக் கண்டால்!

காதல்..........!
சுகமானதுதான்
வாழ்க்கைப் பிரபஞ்சத்தின் சுகங்களை
தரிசிக்காதவரை!

துகள்களாய் வீழும்
ஒவ்வொரு பனித்துளிகளும்........
மனசுக்குள் கசிந்து
உணர்வாகி முகிழ்க்கும் போது.........
காதல் சுகமானதுதான்!

ஆனால்.............!
புரிந்து விலகிக் கொள்!!

யதார்த்த வாழ்வின் தழும்புகள்
கறைகளாகி.............
வாழ்வை நனைக்கையில்

சுகமான காதல் கூட
சுமையாகி.................
சமாதியாகின்றது வாழ்க்கைப்
போராட்டத்தினுள்!

2 comments:

  1. சில உண்மை வரிகள் - வலிகள்...

    ReplyDelete
  2. வலிகள் செல்லும் வழியறியயாதவை

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை