About Me

2020/10/03

நடுவர் பயணம்

 
 


1.

மனவிழிகளில் பருகிய இயற்கையின் எழிலோடு இசைந்திட வாருங்கள் கவித் தோழமைகளே 
கவியுறவுகளே விரைந்து வாருங்கள். இயற்கை எழில் சிந்தும் மகிழ்வினை கவி வரிகளாக்கலாம். ரசிப்பும் கற்பனையும் எழுத்துக்களின் கலவையாக்கி வடித்திடலாம் கவிகளையும். 
------------------------------------------------------------------------------------------------------------

  




2.

மழைத் தோரணங்கள்
..................அழகின் ஆபரணங்கள்/
தவழுதே தரணிப் பந்தலின்
...................அலங்காரங்களாய்/

பருகிடும் விழிகளில்
...................எழிலின் கலவை/
பரவசத் துடிப்பினில்
................... ஈரத்தின் சாயல்/

இன்ப ரசிப்பினில்
...................களிக்கின்ற விரல்களும்/
இதமாக அசையட்டுமே
...................இங்கு கவியாத்திட/

காத்திருக்கின்றோம் உங்கள்
...................கற்பனைக்குள் ஊற்றெடுக்கின்ற/
அனுபவங்களையும் சுவைத்திடவே/
....................வாருங்கள் கவியுறவுகளே
கவியெழுதலாம் அழகாக/
----------------------------------------------------------------------------------------------------

  



3.

 அப்பா......!

அற்புத உணர்வின் 

............கலவை நமக்குள்

சொற்கள் போதுமோ 

............பாசத்தைப் பகிர்ந்திட


கற்கண்டாய் இனித்திடும் 

............ அன்பின் வருடலை

கவிதையாக்குவோம் அழகுத் 

............. தமிழைக் குலைத்து


குறுகிய வரிகளுக்குள் 

............ குதூகலத் துள்ளலை

அருமையான வரிகளில் 

.............. யாத்திட வாருங்கள்


தாருங்கள் உங்கள் 

............. கவிதனை இங்கு

காத்திருக்கின்றோம் நாமும் 

.............யதார்த்தத்தை சுவைத்திட


வாருங்கள் கவித் தோழமைகளே!

--------------------------------------------------------------------------------------------------------

4. 


அஞ்சாதே மனமே அற்புத வாழ்வினில்/
நெஞ்சத் துணிவுனக்குள் கொஞ்சிடும்போது/
வஞ்சத்  சூழ்ச்சிதனை அறுத்திட வருக/
கொஞ்சும் தமிழில் தழுவிடும் வரிதனைச்/
சுவைத்திடும் காத்திருப்பில் நாமும் இங்கே/

ஒவ்வொரு மனதுக்குள்ளும் துளிர்க்கின்ற எண்ணங்கள்/
ஓராயிரம் உணர்வினை அற்புதமாக வருடும்/
அனுபவ விரல்களும் வடித்திடும் வாழ்வியலைப்/
படைத்திடலாம் கவி நடையைச் சுவைத்திடலாம்/
வாருங்கள் உங்கள் கவிதனைத் தவளவிடுங்கள்/

அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்/
நெறியாளர் நீதன் மற்றும் நிறுவுனர் உள்ளிட்ட/
குழுமத்திற்கும் எனது மகிழ்வான நன்றிகள்/

15.10.2020

-----------------------------------------------------------------------------------------------------

5.


 உங்களுடன் ஒரு நிமிடம்.........!

எல்லோரிடமும் தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதோ......
என் கவி நட்புக்களுக்காக ஒரு சந்தர்ப்பம்...

உரிய குழுமத்தில் இணைந்து உரிய விதிகளுக்கமைவாக கவிதனைப் படைத்திட அன்போடு அழைக்கின்றேன். இயலுமானவர்கள் இணையுங்கள்..முயற்சியும் பயிற்சியுமே வெற்றிக்கான வழிகள்
வாருங்கள்.....

நிசப்த இரவினை வருடுகின்ற இருளும்
நீண்ட வானில் ஒளியுமிழ்கின்ற நிலாவும்
தேகத்தை வருடும் தென்றலின் இதமும்
சொல்லிடும் உணர்வுகள் சொர்க்கமே மனதிற்கே
துயிலும் விழிகளில் துள்ளிடும் கனவுகளைத்
தழுவிடும் இரவின் மடியினில் இளைப்பாற

வாருங்கள் கவியுறவுகளே காத்திருக்கின்றோம் கவிதைகளுக்காக

01.11.2020
------------------------------------------------------------
Azka Sathath
 
ஏதோ நினைவுகள்
********************
உதிர்கின்ற ஒவ்வொரு நாட்களிலும் வீழுகின்றதே/
உணர்வுகளுடன் கலந்துவிட்ட இனிய நினைவுகள்/
பள்ளி நாட்களைப் பகிர்ந்த தோழமைகள்/
உள்ளத்தின் சேமிப்பினில் சுகமான சுவடுகள்தானே/

கண்ணீர் ஈரத்தினை ஒற்றியெடுக்கின்ற அன்பும்/
அடங்கிக் கிடந்த தருணங்களும் அழகானவை/
மனதைச் சுவைக்கின்ற ஒவ்வொரு நினைவுகளையும்/
தனிமைக்குள் திறந்தே உயிர்க்கின்றேன் தினமும்/

அஸ்கா சதாத் - 14.11.2020
 


ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் நினைவுகள்
அடிக்கடி வருடி பொழுதுகளுடன் உறவாடும்
சில தித்திக்கும் சிலவோ வலித்திடும்
மனதில் உயிர்த்திடும் அந்த நினைவுகளை
கவிகளால் அழகுபடுத்தலாம் வாருங்கள் கவியுறவுகளே 

------------------------------------------------------------------------- 
26.11.2020
 வாழ்வெனும் மையத்தில்
வந்தமரும் போராட்டங்களை
வரிகளாகப் புனைந்திட
வாருங்கள் கவியுறவுகளே
வாழ்வியல் போராட்டங்களை
வண்ணக் கவிகளில் செதுக்கிடலாம்


--------------------------------------------------------------------------------------------------


உணர்வுகள் பேசுகின்ற அழகான மொழியிது
உறவாகின்ற உள்ளத்தின் அதிர்வுகளுக்கு வரிகளிட்டு வனப்பான கவிதனைத் தாருங்கள். 


----------------------------------------------------------------------------

 
வாய்மையே வெல்லும் எனும் கவித் தலைப்பிற்கு என்னை நடுவராகச் செயற்படுத்துகின்ற நெறியாளர் ஆண்டியூர் நிதன் அவர்களுக்கும் நிறுவுனர் அவர்களுக்கும் கவிதையினைப் படைத்த படைக்க விருக்கின்ற கவிச் சொந்தங்கள் உள்ளிட்ட குழுமத்திற்கு எனது அன்பான இனிய நன்றிகள்.

மெய்யினை சிந்தையில் பொருத்தி
மேன்மையுடன் வாழ்ந்திடும் உணர்வின் பிம்பங்களை
அழகு வரிகளால் செதுக்கிட வாருங்கள்
இனிய கவியுறவுகளே......25.12.2020
------------------------------------------------------------------------------- 
கிழக்கு வானில் எழுச்சி கொள்கின்ற ஆதவனாக உங்கள் விரல்கள் படரட்டும் அழகிய கவிதை வரிகளில். வாருங்கள் கவித் தோழமைகளே... கிழக்கின் விடியலில் வடியட்டும் கவித் துளிகள்.



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!