About Me

2020/10/02

பூக்கள் விடும் கண்ணீர்

 

இயற்கை மடியினில் தவழ்கின்ற பூக்களின்

இறகினைக் கொய்திடுவார் இதயம் அற்றோர்

பசுமைக்குள் தீயினை ஊற்றும் மாந்தர்

பறித்திடுவார் மகரந்த உயிர்ப்பினைப் பாரினில்

சூழல் மாசுக்குள் ஊறிடும் மலர்கள்

சூடுதே கண்ணீரை தன் அழிவுக்காக


ஜன்ஸி கபூர் - 02.10.2020

-----------------------------------------------------------------------

2. உறவுகளோடு உரையாடுவோம்

---------------------------------------------------------

இதயத்தின் உணர்வுகள் உதயமாகும் உறவினில்/

இன்பமும் படர்ந்திடும் இன்னலைத் துரத்தியே/


இயந்திர மொழியினில்  வேண்டாமே தனிமையும்/

இழைந்தோடித் தழுவட்டும் அன்பான சொல்லாடல்/


பேசிடும் வார்த்தைகள் நீக்குமே பேதத்தை/

பேணுவோம் உறவுகளை மகிழ்ந்திடலாம் உரையாடி/


ஜன்ஸி கபூர் - 07.10.2020


-------------------------------------------------------------------
3. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் அனுபவம்/

ஜன்ஸி கபூர் - 08.10.2020

---------------------------------------------------------
4. தமிழை அரங்கேற்று தமிழா
----------------------------------------------------
நாவும் மொழிந்திடும் இனிமைத் தமிழை/
நானிலம் போற்ற அரங்கேற்று தமிழா/

சுருங்கிடும் உலகின் உணர்வின் வழியாக/
வருங்காலம் ஏந்தவே செதுக்கிடுவோம் அழகாக/

தாய்மையை மதிக்கும் பண்பாட்டின் சுவடாய்/
வாயும் உதிர்க்கட்டும் செந்தமிழைத் தினமும்/

ஜன்ஸி கபூர் - 08.10.2020



----------------------------------------------------------------------- 

5. கனவிலும் கவி பாடு
--------------------------------- 
கனவிலும் கவி பாடு நிதமும்/
கற்பனைச் சுவையுடன் யதார்த்தமும் பிசைந்தே/

சொற்களை அழகில் கோர்த்தே தினம்/
வடித்திடு கவிதனை வனப்பை ரசித்திடு/

தூரிகை நீயேந்தி துடித்திடும் உணர்வால்/
உயிர்த்திடு உலகமும் விரும்பிச் சுவைத்திட/

ஜன்ஸி கபூர் - 13.10.2020


------------------------------------------------------------------------------------- 
6. தாயே தெய்வம்
------------------------------
பத்துத் திங்கள்  பக்குவம் காத்து/
பண்பான வாழ்வுதனைக் கற்றும் தந்து/

பாசம்தனை தினமும் உறவிலே கோர்த்து/
உயிரினைப் போர்வையாக்கி 
 உள்ளத்தைத் தொட்டிலாக்கி/

உணர்வுக்குள் வலியினை மெல்ல உறிஞ்சும்/
உன்னத தாயே அன்பின் தெய்வம்/

ஜன்ஸி கபூர் - 15.10.2020

------------------------------------------------------------- 
7. வானம் எழுதிய கவிதை
-----------------------------------------
வெம்மையும் கிழித்ததே
.......... தரையினில் கோடுகள்/
வெந்ததே வாழ்வும்
.......... பஞ்சத்தின் கோரத்தில்/
புண்பட்ட மனங்களில்
........... இன்பத்தினை வார்க்கவே/
விண்ணெங்கும் பூத்ததே
............ கார்மேகப் பூக்களும்/
எண்ணமும் சிலிர்த்திட
.......... பொழிந்ததே பூமழை/
இரசித்தேனே நானும்
........... மழைக் கவிதையை /

ஜன்ஸி கபூர் - 16.10.2020


--------------------------------------------------------------------------------- 
8. பிணைத்திடும் வாழ்க்கை இணைந்திடும் இறுதிவரை

ஜன்ஸி கபூர் - 20.10.2020


--------------------------------------------------------------------------- 

9. ஓயாத மரணங்கள்
---------------------------------
மரணச் சுழற்சிக்குள்
..........மண்டியிடுகின்றன உயிர்கள்/
பிணிக்குள் தேகம்
.........பிணைக்கின்றதே இழப்புக்களில்/

விபத்தும் அனர்த்தமென்றும்
...........விளையாடுகின்றதே விதியும்/
கொலையும் தற்கொலையும்
..........கொல்கின்றதே நேயத்தினையும்/

கலப்பட உணவும்
..........கலக்கமே ஆரோக்கியத்திற்கே/
ஓலமிடும் இறப்புக்கள்
...........ஓயாது தொடர்கின்றனவே/

ஜன்ஸி கபூர் - 21.10.2020

  

--------------------------------------------------------- 
10. நிம்மதி தேடும் மனிதர்கள்
------------------------------------------------
சுருங்குகின்ற வாழ்வில் 
.......விருப்பங்களோ மலைபோல்/
சுகமிழக்கும் உழைப்பு 
.......சுமையோ உடலுக்கே/

உலக மாற்றங்கள் 
.......சுழற்றும் தேவைகள்/
உணர்வுகளுக்கு வலியே 
......உளத்திற்கேது அமைதி/

நவீனத் தேடலின் 
.......நாகரிக வாழ்க்கையில்/
நனைந்திடத் துடிக்கையில் 
......நிம்மதியும் தொலைகிறதே/

ஜன்ஸி கபூர் - 26.10.2020

  
-----------------------------------------------------------
 
11.கொஞ்சும் காதல்
-------------------------------
நெஞ்சத்து அன்பில் கொஞ்சும் காதல்/
அஞ்சாதே வாழ ஆருயிர் தழுவி/
ஆசைகள் வருடும் கனவின் விரல்களை/
அணைக்கின்றேன் தினமும் இனிக்கின்றாய் நினைவாக/

எனை ரசித்தே நீயிடும் திரை/
எழில் வதனம் மையிடும் நாணமாக/ 
கட்டிக்கரும்பே உன்றன் புன்னகையும் அமிர்தமே/
வெட்கப்படும் கண்கள் மின்னுதே மின்னலாக/
 
உணர்வுகள் துடிக்கின்ற இளமைப் பருவம்/
உறவாக்க நினைக்குதே மெய்க்காதல் பண்பினாலே/  

ஜன்ஸி கபூர் - 27.10.2020



--------------------------------------------------------------- 
12.கவிதைக்கு உயிர் கொடுப்போம்
-----------------------------------------------------------
விழிகள் காணுகின்ற  
........யதார்த்தங்களை இணைத்தே/
அழகான எண்ணங்களை 
.......அதில்ப் பிசைந்து/

வழிகின்ற கற்பனைகளால் 
.......அழகினைக் கோர்த்து/
வடிக்கின்ற கருவை 
........உயிர்க்குமே விரல்கள்/

பிறந்திடும் கவியும் 
.......பறந்திடும் உலகில்/
சிறந்த வாழ்வின் 
.......பிம்பமாகி வருடுமே/

ஜன்ஸி கபூர் - 27.10.2020




------------------------------------------------------------------------------------------
13.சோகமான சுமைகள்
-------------------------------------
உருளும் வாழ்வில் 
........உறவுகளின் இழப்புக்கள்/
உணர்வின் வலியே 
.......உள்ளத்தின் சுமையாகும்/

கொரோனாத் தொற்றும் 
........கொல்லுதே வாழ்வை/
கொடூர வறுமையின் 
.........கொடுமையும் தாக்குதே/

வாழ்க்கைப் போராட்டங்கள் 
........சந்திக்கும் சுமைகள்/
விரட்டாதே சோகங்களை 
.......நீளுகின்ற பொழுதுகளில்/

ஜன்ஸி கபூர் - 28.10.2020




--------------------------------------------------------------------------------------------------
14. இணைக்கும் உறவுகள்
----------------------------------------
அணைப்பார் பெற்றவர்
............அன்பால் உவந்தே/
பிணைப்பார் கரங்களை
...........உடன்பிறந்தோரும் கனிந்து/
துணைக்கும் வருவார்
...........நட்பினரும் நிழல்போல்/
பிணக்கும் கொள்ளா
...........சுற்றமும் ஊரும்/
முரண்களைக் கலைத்தே
............தாங்கிடுவார் தூண்களாகி/
இணைக்கும் உறவுகளால்
............இனித்திடுமே வாழ்வும்/

ஜன்ஸி கபூர் - 29.10.2020 

--------------------------------------------- 
15. வீழ்ந்தாலும் கலங்காதே 
------------------------------------------- 
வீழ்ந்தாலும் கலங்காதே  
..........விதியென்றே நினைக்காதே/
வீழ்கின்ற பொழுதெல்லாம் 
..........எழுதலே உந்தலாம்/

வாழ்க்கைத் தளத்தில் 
...........ஏற்றமும் இறக்கமும்/
வாழ்வியல் நெறிதானே 
.........உணர்ந்தவர் வென்றிடுவார்/

வீழ்கின்ற பொழுதெல்லாம் 
.........ஊக்கமே உயர்வாம்/
எழுந்திடும் முயற்சியே 
.........ஏற்றத்தின் சுவடாம்/
 
ஜன்ஸி கபூர் - 30.10.2020









No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!